சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி கடுமையாக இருந்து வருகிறது. மாருதி பிரெஸ்ஸாதான் சிறந்த தேர்வாக கருதி இருந்தவர்களுக்கு, வெனியூ காரை களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். நவீன யுக கார்களுக்குரிய டிசைன் அம்சங்கள், அதிசிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வந்த இந்த கார் முன்பதிவுகளை அள்ளி வருகிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெனியூ கார் குறித்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த காரை விசாரணை செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த காருக்கு இதுவரை 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கார் சந்தை மிக சோதனையா காலக்கட்டத்தில் இருக்கும் நிலையில், வெனியூ காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஹூண்டாய் நிறுவனத்திற்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

ஹூண்டாய் வெனியூ ஹிட் அடித்ததற்கு பல்வேறு சிறப்பம்சங்களை கூறலாம். பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் மினியேச்சர் மாடல் போன்ற டிசைன் தாத்பரியங்களையும், அதேநேரத்தில் பல தனித்துவ அம்சங்களையும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

மிகப்பெரிய க்ரில் அமைப்பு, டியூவல் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இந்த காருக்கு தனித்துமான முக அமைப்பையும், வசீகரத்தையும் கொடுக்கிறது. பக்கவாட்டில் மினி க்ரெட்டா போலவே தோற்றமளிக்கிறது. வித்தியாசமான அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் ஆகியவை எஸ்யூவிகளுக்குரிய மிடுக்கை வழங்குகிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

பின்புறத்தில் சதுர வடிவிலான ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இதன் அழகுக்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த டிசைன் அம்சங்களை பெற்ற மாடலாக மாறி இருக்கிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் மூன்று எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. முதலாவதாக, இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

மூன்றாவதாக வழங்கப்படும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

மைலேஜிலும் சிறப்பான மாடலாக இருக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.27 கிமீ மைலேஜையும், டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.15 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 17.52 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.70 கிமீ மைலேஜையும் வழங்க வல்லதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

இந்த காரில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடிய இணைய வசதியுடன் வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரின் தொழில்நுட்பங்களை ரிமோட் முறையில் கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்புக்கும் கூடுதல் வசதியை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கும். பாதுகாப்பு வசதிகளிலும் சிறந்த தேர்வாக உள்ளது.

சோதனையான காலத்தில் முன்பதிவுகளை வாரி குவிக்கும் வெனியூ எஸ்யூவி... உற்சாகத்தில் ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரையிலான விலையில் பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2019, 18:25 [IST]
English summary
Hyundai Venue the sub-4 meter compact SUV is doing great in our Indian market. The Korean carmaker has just received over 45,000 bookings for the Venue within a month of its launch here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+