ஆகஸ்ட்டிலும் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்த ஹூண்டாய் வெனியூ!
கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸாவை முந்தி ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 மாடலாக வாகை சூடி இருக்கிறது.

இந்திய எஸ்யூவி ரக கார் சந்தையில் மாருதி பிரெஸ்ஸா முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ கார் மாருதி பிரெஸ்ஸாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவுக்கு நெருங்கிய நிலையில், ஜூலை மாதத்தில் ஓவர்டேக் அடித்து காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் வெனியூ முதலிடம் பிடித்தது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது மாதமாக ஆகஸ்ட்டிலும் மாருதி பிரெஸ்ஸாவை ஓவர்டேக் அடித்து ஹூண்டாய் வெனியூ முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த மாதம் 7,109 மாருதி பிரெஸ்ஸா காரகள் விற்பனையாகி உள்ளன. ஆனால், ஆகஸ்ட்டில் 9,342 ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனையாகி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு 13,271 மாருதி பிரெஸ்ஸா விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் பிரெஸ்ஸாவின் விற்பனை 46 சதவீதம் குறைந்துபோய்விட்டது. ஹூண்டாய் வெனியூ கார் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மாருதி பிரெஸ்ஸாவைவிட கூடுதல் அம்சங்களை ஹூண்டாய் வெனியூ கார் பெற்றிருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா கார் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஹூண்டாய் வெனியூ கார் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

மேலும், இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை அளிக்கும் என்பதும் இந்த கார் மீதான மோகம் வாடிக்கையாளர் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஸ்மார்ட்போன் செயலி மூலமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

அத்துடன், ரூ.6.50 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய ஹூண்டாய் வெனியூ கார் கிடைப்பதும், அதிக வரவேற்பை அளித்துள்ளது. டிசைனிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், ஹூண்டாய் நெருக்கடியை போக்குவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாருதி முனைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








