புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் இணையதளம் மூலமாக கசிந்துள்ளன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

டீலர் யார்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டுள்ளார். அந்த படங்கள்தான் தற்போது ஆட்டோமொபைல் இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

ஹூண்டாய் வெனியூ கார் நிற்பதற்கு அருகில் மஹிந்திரா எஸ்யூவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் கார்களின் டீலராக செயல்படும் நிறுவனத்தின் யார்டில்தான் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

பேபி க்ரெட்டாவாக கூறப்பட்டு வந்த இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பில் முற்றிலும் புதியதாக இருக்கிறது. மிகப்பெரிய க்ரோம் க்ரில் அமைப்பு, டாடா ஹாரியர் போன்று, சற்று கீழாக அமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள் என புது மாதிரி தோற்றத்துடன் இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

உட்புறத்தில் அகலமான ஃப்ளோட்டிங் எனப்படும் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த சாதனத்துடன் வோடஃபோன் சிம் கார்டு மூலமாக இணையதள வசதியை பெற்றிருக்கும் என்பதுடன், 33 விதமான தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

பின்புறத்தில் சதுர வடிவிலான டெயில் லைட்டுகள், அதனை இணைக்கும் கருப்பு வண்ண சட்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பின்புறத்தில் டர்போ பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, நாம் ஏற்கனவே சொன்னது போன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

இந்த 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர்பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையைும், 171 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இமைக்கப்பட்டு இருக்கும். இதுதவிர்த்து, 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் படங்கள் வெளியானது!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் வரும் 17ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலைப்பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Image Courtesy: CarWiki

Most Read Articles

English summary
Hyundai Venue SUV Images leaked online.
Story first published: Monday, April 1, 2019, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X