மலிவான விலையில் சிறப்பம்சங்களை வாரி வழங்க களமிறங்குகிறது ஹூண்டாயின் அதிநவீன வெனியூ கார்!
இந்தியா மற்றும் அமெரிக்காவில் பிரத்யேமாக களமிறங்கும் ஹூண்டாயின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வெனியூ கார். இந்த கார் குறித்த முழுமையான தகவை இந்த பதிவில் காணலாம்.

பட்ஜெட் ரக கார்களைத் தயாரித்து வரும் ஹூண்டாய் நிறுவனம் தனது புத்தம் புதிய வெனியூ மாடல் காரை இந்தியா மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய உள்ளது. க்ரெட்டாவின் சப்-மாடலாக உருவாகியுள்ள இந்த கார், மாருதியின் விடாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்ட் இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.

இந்த காரில் அதிநவீன தொழில்நுட்ப வசியாக ஹூண்டாயின் புளூலிங்க் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது காரில் உள்ள 33 உபகரணங்களை கட்டுப்படுத்த உதவும். அவ்வாறு சில செயல்களை ஸ்மார்ட்போன் செயலி மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும். ஹூண்டாயின் புளூ லிங்க் சிஸ்டமானது, காரை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவும். இந்த சிஸ்டமானது, கார் திருடப்பட்டிருந்தால் அதனை டிராக் செய்யவும், காரை உடனடியாக கண்டுபிடித்து மீட்க உதவும். மேலும், இந்த தொழில்நுட்பமானது, ஸ்பீடு கன்ட்ரோல், ஜியோ-ஃபென்ஸ் அலர்ட், பேனிக் நோடிஃபிகேஷன் மற்றும் இலக்கை பகிரும் தொழில்நுட்பம் ஆகிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாயின் இந்த புளூலிங்க் தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. மேலும், இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கார்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன. மேலும், இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு ஹூண்டாயின் வெர்னா ஓர் நவீன வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாசதியானது, வோடஃபோனின் இ-சிம் மூலம் இயங்கக்கூடியது. இது, காரின் உரிமையாளருடைய குரல் கட்டளையைக் கொண்டு காரை கட்டுபடுத்தும். இந்த மேம்படுத்தப்பட்ட சாதனம் கார்களின் தந்திரத்தின் ஆதரமாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ஹூண்டாயின் இந்த வெனியூ காரில் கூடுதலான சில வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில், லைவான போக்குவரத்து தகவல், செயற்கைக்கோள் உதவியுடன் பணிபுரியும் நேவிகேஷன் மற்றும் நேரலையாக இட தேடுதலை வழங்கும் மேப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த தொழில்நுட்ப வசதிக்காக சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஹூண்டாய் இணைந்துள்ளது. மேலும், இந்த கார் குரல் ஒலி எழுப்பி எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை தரும்.

ஹூண்டாய் வெனியூ கார் ஸ்டைலான மற்றும் மாடர்ன் டிசைனைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எஸ்யூவி மாடல் காராகும். அவ்வாறு, காரின் முகப்பு பக்கத்தில் கேஸ்கேடிங் கிரில் மற்றும் காம்போசைட் லைட் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் பார்ப்பதற்கு க்ரெட்டாவைப் போன்று காட்சியளிக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த கார் மூன்று எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்க இருக்கிறது. அவ்வாறு, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.4 லிட்டர் நேட்சுரல்லி ஆஸ்பைரேடட் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின்களில் கிடைக்க இருக்கின்றது.

ஹூண்டாய் வெனியூவின் புளூலிங்க் தொழில்நுட்ப இணைப்பு குறித்து அந்நிறுவனத்தின் எம்டி-யும், சிஇஓ-வுமான சியோன் சியோப் கிம் பேசியதாவது, "நாங்கள் ஹூண்டாய் வெனியூவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷமடைகிறோம். எங்களுடைய இந்த எதிர்கால எஸ்யூவி காரில் ஹூண்டாயின் குளோபல் புளூ லிங்க் கன்னெக்டிவிட்டி சொல்யூஷன் இந்தியர்களுக்காகவே பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இது, தற்போது சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட் கார்களை தனித்துவமானதாக இருக்கும்" என்றார்.

மேலும் அவர், "இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம், காரின் உரிமையாளரை அவரது குடும்பம், வேலை மற்றும் சமூகத்தினரிடையே எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்க உதவும்" என்று கூறினார். ஹூண்டாயின் புத்தம் புதிய வெனியூ காரை அந்த நிறுவனம் வருகின்ற 17ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் வருகின்ற 17ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை விலை நிர்ணியக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications