இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கார் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இதற்கான புக்கிங்கும் தொடங்கியுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார், இன்று (ஏப்ரல் 17) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. மும்பை மற்றும் கோவாவிற்கு இடையேயான கடல் பரப்பில், ஓர் உல்லாச கப்பலில் வைத்து, ஹூண்டாய் வெனியூ கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இதற்கான நிகழ்ச்சி இன்று இரவு 8.15 மணிக்கு நடைபெறுகிறது. அத்துடன் நியூயார்க் ஆட்டோ ஷோவிலும் ஹூண்டாய் வெனியூ வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியை ஹூண்டாய் நிறுவனம் யூ-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ வெளியீடு இன்று நடைபெறும் சூழலில், அடுத்த மாத (2019 மே) மத்தியில் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ காரின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் வேரியண்ட்கள் வாரியாக இடம்பெறவுள்ள வசதிகள் குறித்த சரியான தகவல்கள் அனைத்தும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் தெரியவரும். அதற்கு நாம் மே மாதம் வரை காத்திருக்க வேண்டும். என்றாலும் ஹூண்டாய் வெனியூ குறித்த பல்வேறு தகவல்கள் தற்போதே தெரியவந்துள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இது காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா டபிள்யூஆர்-வி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிடவுள்ளது. ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.7.5 முதல் ரூ.11 லட்சத்திற்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியுள்ளது. எனவே இனிமேல் சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் ஹூண்டாய் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் வெனியூ 5 சீட்டர் மாடல் ஆகும்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1 லிட்டர்-3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகியவை உறுதியாகியுள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இதுதவிர 1.4 லிட்டர்-4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அனேகமாக பேஸ் வேரியண்ட்டில் இந்த இன்ஜின் வழங்கப்படலாம். இதனிடையே 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வழங்க கூடியதாக இருக்கும்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

அதே சமயம் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை உருவாக்க வல்லது. ஹூண்டாய் நிறுவனம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 99 பிஎச்பி பவர் மற்றும் 132 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. அதே நேரத்தில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரின் இன்டீரியரை விளக்கும் ஸ்பை படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாயின. ஃபிட் அண்ட் ஃபினிஷ் என்ற விஷயத்தில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரை போன்று வெனியூ காரும் அசத்துகிறது. இதன் சென்டர் கன்சோலுக்கு மேலே டேப்லெட் போன்ற பெரிய டச் ஸ்கீரின் இன்போடெயின்ட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில், 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், இஎஸ்பி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் குறைந்தபட்சம் 2 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஸ்பீட் அலர்ட்ஸ், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் வெனியூ கார்களையாவது விற்பனை செய்ய வேண்டும் என ஹூண்டாய் இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கிரெட்டா கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...

இதனிடையே வரும் மே மாத மத்தியில் ஹூண்டாய் வெனியூ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள சூழலில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹூண்டாய் டீலர்ஷிப்களில் அதற்கான புக்கிங் தற்போதே தொடங்கியுள்ளது. ஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவு தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை. டீலர்ஷிப்களை பொறுத்து முன்பதிவு தொகை மாறுபடுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Venue To Be Officially Unveiled In India Today. Read in Tamil
Story first published: Wednesday, April 17, 2019, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X