ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டிலும் இரட்டை வண்ணத் தேர்வு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

ஹூண்டாய் வெனியூ கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மாறி இருக்கிறது. க்ரெட்டா போலவே டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ கார் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு டாப் வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ணத் தேர்வு வழங்குவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாம்.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் எஸ்எக்ஸ் என்ற வேரியண்ட்டில் மட்டுமே இரட்டை வண்ணத் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டுகளிலும் இரட்டை வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

இதன் மூலமாக, அதிக விலை கொடுத்து டாப் வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் மதிப்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த வண்ணத் தேர்வுக்காக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

ஹூண்டாய் வெனியூ 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் இருக்கும் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

இந்த காரின் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. மற்றொரு 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் டியூவல் டோன் தேர்வு வழங்கப்படாது என்று தெரிகிறது. ஏனெனில், இந்த மாடலானது இ மற்றும் எஸ் ஆகிய இரண்டு விலை குறைவான வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

ஹூண்டாய் வெனியூ காரின் 1.0 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டானது ரூ.10.75 லட்சத்திலும், 1.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலின் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டானது ரூ.11.25 லட்சத்திலும் கிடைக்கிறது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.10.99 லட்சத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று வேரியண்ட்டுகளிலும்தான் டியூவல் டோன் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது.

Source:Autocarindia

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2019, 10:40 [IST]
English summary
According to report, Hyundai is planning to introduce dual tone options in Venue SUVs top variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+