ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

கடந்த மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் 50,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்து சாதித்தது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

ஹூண்டாய் வெனியூ கார் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 எச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 90 எச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

இந்த நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுக்கு பதிலாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி தெரிவிக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

இன்று அறிமுகமாக இருக்கும் புதிய கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுதான் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான திறனை வெளிப்படுத்தும் தேர்வுகளில் கிடைக்கும். அதாவது, 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனிலும், 90 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

இதில், 90 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவில் பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுக்கு மாற்றாக வர இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வானது வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலைவிட விலை அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2019, 12:01 [IST]
English summary
Hyundai is planning to launch new diesel engine in Venue compact SUV by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+