மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

மலிவு விலையில் விற்பனைக்கு களமிறங்கி அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் வெனியூ காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், அதன் எஸ்யூவி ரகத்திலான வெனியூ காரை கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த கார் மலிவான விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாதல், இமாலய அளவிலான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், இந்திய வாகனச் சந்தை அதுவரை காணாத அளவிலான புக்கிங்கை வெனியூ கார் பெற்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரை, மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் குந்தன் ஹூண்டாய் என்ற டீலர், சிஎன்ஜி மாடலாக அப்கிரேட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவை இன்ஃபோ க்ளோன் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...

சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டிருக்கும் வெனியூ, 1 லிட்டர் பெட்ரோல் டர்போ வேரியண்ட் என கூறப்படுகின்றது. இவ்வாறு, டர்போ பெட்ரோல் எஞ்ஜினில் சிஎன்ஜி கிட்டினைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

ஆகையால், இனி இந்த வெனியூ எஸ்எக்ஸ், 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்ட், இனி சிஎன்ஜி எரிபொருளில் இயங்க இருக்கின்றது.

சிஎன்ஜி கிட்டை பொருத்தியுள்ள குந்தன் ஹூண்டாய் டீலர், அதற்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ என்ற வாரண்டியை வழங்க இருக்கின்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

புதிய சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கும் வெனியூ காரில் பெரியளவில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், மாமுலான வெனியூவில் காணப்படும் அதே பாகங்கள் இந்த காரின் எஞ்ஜின் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், இது டர்போசார்ஜட் என்ஜின் என்பதால், அதற்கான இசியூ எந்திரம் மட்டும் கூடுதலாக காணப்படுகின்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

அதேசமயம், பூட் பகுதியில் மட்டும் புதிய மாற்றமாக சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டுள்ளது. இது 14 கிலோ எடை கொண்டதாகும். இதில், 9-10 கிலோ சிஎன்ஜி வாயுவை உள்ளடக்கிக் கொள்ள முடியும்.

இத்துடன், காரின் கேபினுக்குள் ஸ்பெஷல் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இது, காரை பெட்ரோலிருந்து சிஎன்ஜிக்கும், சிஎன்ஜியில் இருந்து பெட்ரோலுக்கும் மாற்ற உதவும். இதைத் தவிர ஹூண்டாய் வெனியூவில் வேறெந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

MOST READ: 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது இவி நிறுவனம்... முன்பதிவும் துவங்கியது!

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

இந்த கார் முதலில் பெட்ரோல் மோடில் ஸ்டார்ட் செய்யப்படுகின்றது. தொடர்ந்து, எஞ்ஜின் சீராக இயங்க தொடங்கிய பின்னர், தானாக சிஎன்ஜி மோடுக்கு மாற்றப்படுகின்றது. அதாவது, எஞ்ஜின் 2,000த்தில் இருந்து 2,500 ஆர்பிஎம்மைத் தொடும்போது, இந்த செயல் தன்னிச்சையாக தொடங்குகின்றது.

MOST READ: பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

இந்த செயல் தொடங்கப்பட்ட பின்னரும் எஞ்ஜின் சீரான திறனிலேயே இயங்குகின்றது. அவ்வாறு, 80-100 கிமீ வேகத்தில் சென்றபோதிலும் பெரியளவில் மாற்றங்கள் தெரியவில்லை.

இதுகுறித்த சோதனைகள் பல முன்னதாக மேற்கொண்ட பின்னரே, சிஎன்ஜி கிட்டினை வெனியூவில் பொருத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

MOST READ: ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதோட சிறப்பு என்னனு தெரியுமா...?

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

ஹூண்டாய் வெனியூவை சிஎன்ஜி வேரியண்டாக மாற்றுவதற்கு செலவிடப்பட்ட தொகைகுறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இதற்கு ரூ. 65 ஆயிரம் வரை செலவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது. ஏனென்றால், டர்போ பெட்ரோல் எஞ்ஜினுக்கான சிஎன்ஜி கிட் கூடுதல் விலைக் கொண்டுள்ளது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

இந்த சிஎன்ஜி கிட் ஹூண்டாய் வெனியூவில் மட்டுமின்றி, டாடா நெக்ஸான், டியாகோ, டீகோர், மற்றும் ஜேடிபி மாடல்கள் போலோ ஜிடி டிஎஸ்ஐ உள்ளிட்ட மாடல்களிலும் பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

அதேசமயம், சிஎன்ஜி கிட்டை ஹூண்டாய் டீலர் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. இது தற்போது வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், இது முழுமையான வெற்றிப் பெரும்பட்சத்தில், விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு வாரண்டி போன்ற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

ஹூண்டாய் வெனியூ கார் இந்தியாவில் ரூ. 6.50 லட்சம் முதல் ரூ.11.11 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

இந்த கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றது. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின்களாகும்.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

இதில், 1.2 லிட்டர் எஞ்ஜின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் 99 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டர்போ பெட்ரோல் தரத்தில் கிடைக்கும் 1.0 லிட்டர் எஞ்ஜின் 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது.

Most Read Articles

English summary
Hyundai Venue Turbo Petrol Engine Gets CNG Kit-Video. Read In Tamil.
Story first published: Wednesday, August 28, 2019, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X