மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

ஆச்சரியமான விலையில் களமிறங்கியுள்ள புதிய ஹூண்டாய் கார் விற்பனையில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரை கடந்த மே மாதம் 21ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கிய முதல் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் வெனியூதான். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் வெனியூ கடுமையான சவால் அளித்து வருகிறது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

ஹூண்டாய் வெனியூ காரில் தேவையான அனைத்து லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் கார்களுக்கே உரிய பாணியில் பல்வேறு வசதிகளையும் வெனியூ பெற்றுள்ளது. டிசைன் என்ற விஷயத்திலும் ஹூண்டாய் நிறுவனம் குறைவைக்கவில்லை. வெனியூ கார் அட்டகாசமான ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

அத்துடன் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில், மிகவும் சவாலான விலையில் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்திய வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் வெனியூ காருக்கு வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் மொத்தம் 8,763 வெனியூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாதான். ஆனால் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனையான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை வெறும் 8,871 மட்டுமே. அதாவது ஹூண்டாய் வெனியூவுடன் ஒப்பிடுகையில் 108 கார்கள் மட்டுமே அதிகமாக விற்பனையாகியுள்ளன.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

ஹூண்டாய் வெனியூ விரைவில் முதல் இடத்தை பிடித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹூண்டாய் வெனியூ காரின் வருகை, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை 17 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

இதற்கு ஹூண்டாய் வெனியூ காரின் வருகையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அறிமுகம் செய்யப்பட்ட உடனே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலிலும் நுழைந்து விட்டது ஹூண்டாய் வெனியூ.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் ஹூண்டாய் வெனியூ 9வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு எஸ்யூவி ரக காரான கிரெட்டாவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 8,334 கிரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பு காரணமாக தனது போட்டியாளர்களான மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களை ஹூண்டாய் வெனியூ ஏற்கனவே விற்பனையில் வீழ்த்தி விட்டது. தற்போது அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில் வெனியூ முதலிடத்தை குறிவைத்துள்ளது.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

தற்போதைய நிலையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது ஹூண்டாய் வெனியூ. ஹூண்டாய் வெனியூ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் உள்பட மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் எலைட் ஐ20 காரிடம் இருந்தும், 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் கிரெட்டா காரிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இதுதவிர புதிய 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் கிடைக்கிறது. ஹூண்டாய் வெனியூ காரின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் அதன் விலை என்று சொல்லலாம்.

மலிவான விலையில் களமிறங்கி ஆச்சரியம்... புதிய ஹூண்டாய் காரை சொந்தமாக்க இந்தியாவில் கடும் போட்டி

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காருக்கு மிகவும் ஆச்சரியமான விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை வெறும் 6.50 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 11.10 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என இதனை கூறலாம்.

Most Read Articles

English summary
Hyundai Venue Sales Off To A Flying Start — Gives Stiff Competition To Maruti Vitara Brezza. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X