ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

ஹூண்டாய் வெர்னா காரின் பிஎஸ்-6 மாடல் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னா டாப்-3 மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன்படி, ஹூண்டாய் நிறுவனமும் தனது வெர்னா காரில் பிஎஸ்-6 மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக பிஎஸ்-6 எஞ்சினுடன் ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

அதாவது, கியா செல்டோஸ் காரில் இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற இருக்கிறது. அதுவும் தற்போதைய மாடலிலேயே கொடுக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் சிறிய மாற்றங்களுடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 114 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, முதலில் பிஎஸ்-6 மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே சில மாதங்களுக்கு விற்பனை செய்யப்படும்.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

ஹூண்டாய் வெர்னா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் நீக்கப்பட இருக்கின்றன.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

அடுத்த ஆண்டு மத்தியில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அந்த மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்படும். அதுவும், கியா செல்டோஸ் காரில் தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

கியா செல்டோஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இதில் சிறிய மாற்றங்களை செய்து புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பயன்படுத்தப்படும்.

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெர்னா காரைவிட கூடுதல் விலையில் புதிய பிஎஸ்-6 வெர்னா கார் வர இருக்கிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுடன் நேரடியாக போட்டி போடும்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2019, 15:15 [IST]
English summary
According to report, Hyundai is planning to launch Verna BS6 petrol model by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+