ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

கடந்த 2017ம் ஆண்டு புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் அண்மையில் சீனாவில் நடந்த செங்க்டு மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

இந்த படங்களின் மூலமாக புதுப்பொலிவுடன் வரும் வெர்னா காரில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளத்தை காண முடிகிறது. புதிய க்ரில் அமைப்பு, மூன்று அறையுடனஅ கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, பெரிய ஏர்டேம், எல்இடி விளக்குகளுடன் கூடிய பட்டை, சன்ரூஃப் மற்றும் சுறா துடுப்பு வடிவ ஆன்டென்னா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ண டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

வெளிப்புறத்தை போலவே, உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உட்புறத்தில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி போன்று இந்த காரில் புளூலிங்க் செயலி மூலமாக உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனிலிருந்து கார் இயக்கம் பற்றிய தகவல்கள் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற முடியும்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றது. குறிப்பாக, இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைந்திருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் பம்பர் அமைப்பும் மிக மிரட்டலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் 6 ஏர்பேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் 4,450 மிமீ நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட இந்த புதிய மாடல் 25 மிமீ கூடுதல் நீளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1,720 மிமீ அகலமும், 1,455 மிமீ உயரமும் பெற்றுள்ளது. வீல் பேஸ் 2,600 மிமீ ஆக உள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதே எஞ்சின் தேர்வுகள்தான் கியா செல்டோஸ் எஸ்யூவியில் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வரும் 30ந் தேதி சீனாவில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2019, 10:42 [IST]
English summary
Ahead of its launch in China, the official images of the new Verna have been released. It is expected to unveil in India at 2020 Delhi Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+