ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி முதல்முறையாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் டிசம்பரில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் அடுத்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் முக்கிய மாற்றமாக, புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. க்ரில் அமைப்பில் பெரிய க்ரோம் சட்டமும், அதற்கு கீழாக கருப்பு வண்ணச் சட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் புதிய பம்பர் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டேம் பகுதி க்ரோம் பீடிங்குடன் அழகுற காட்சி தருகிறது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய 19 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் புதிய வடிவிலான ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இன்டீரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லை.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கு காரின் இயக்கம் குறித்த தகவல்களை பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

ஐரோப்பிய நாடுகளில் சிஆர்வி எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் இருக்கிறது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஹைப்ரிட் எரி நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா அக்கார்டு காரில் பயன்படுத்தப்படும் அதே ஹைப்ரிட் சிஸ்டம்தான் இதிலும் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்களை தனித்தனியாகவும், ஹைப்ரிட் மோடிலும் வைத்து இயக்க முடியும்.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி 7 சீட்டர் மாடலிலும், டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எரிபொருள் சிக்கன தர நிர்ணயத்திற்காக, ஹைப்ரிட் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!

அடுத்த ஆண்டு இறுதியில் புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா கோடியாக், ஃபோர்டு எண்டெவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2019, 16:47 [IST]
English summary
Honda has revealed new gen CR-V facelift model in just three years of its global debut.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+