ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!
ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிய சந்தைக்கான மாடலில் க்ரோம் பூச்சு ஆக்சஸெரீகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிக கூர்மையான தோற்றத்தை அளிக்கும் எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, வித்தியாசமான பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பின்புறத்தில் டெயில் லைட்டுகளின் டிசைன் மிக கவர்ச்சியாக இருக்கிறது.

புதிய மாடலில் 17 அங்குல அலாய் வீல்கள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்கள். வழக்கம்போல் பின்புற எல்இடி டெயில் லைட்டுகளின் டிசைன் மிகச் சிறப்பாக இருக்கிறது.

உட்புறத்திலும் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. புதிய ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சுவிட்ச் கியர் இடம்பெற்றுள்ளது. 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஆசிய சந்தைகளுக்கான மாடலில் 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும். வெளிநாட்டு மாடலில் கூடுதலாக மோதலை தவிர்க்கும் பாதுகாப்பு நுட்பம், தடம் மாறுதலை எச்சரிக்கை வசதி, ஓட்டுனர் கவனக்குறைவை தவிர்க்கும் பாதுகாப்பு நுட்பங்கள் உண்டு.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்கவைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 151 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இறுக்கும்.

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கும் வாய்ப்பும் உள்ளது.

அண்மையில் வந்து வெற்றி நடைபோடும் ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய கார் மாடல்களுக்கு புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் போட்டியாக இருக்கும். வரும் ஜூனில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








