10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

சமூக வலைத்தளங்களில் 10 வருட சவால் (10 year Challenge) பிரபலமடைந்துள்ளது அதில் அனைவரும் 10 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது உள்ள புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்த சவால் தற்போது உலக அளவில் வைரலாகியுள்ளது. அது போல நமக்கு பிரபலமான கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

மாருதி சுசூகி ஸ்விஃப்ட்:

மாருதி சுசூகி நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் என்றால் அது மாருதி ஸ்விஃப்ட் கார்தான். விற்பனைக்கு அறிமுகமான வருடமே விற்பனையில் கொடிகட்டி பறந்தது. 6 மாதம் ஒரு வருடம் என முன்பதிவில் விற்பனையானது. இப்பொது வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறது ஸ்விஃப்ட் கார். சிறந்த மைலேஜ் காரக விளங்கிய ஸ்விஃப்ட் படிப்படியாக LXi, VXi, VXi AMT, ZXi, ZXi AMT மற்றும் ZXi+ என பல வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்து வசூலை குவித்தது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

மாருதி சுசூகி ஆல்ட்டோ:

மாருதி சுசூகி நிறுவனத்தின் புகழ்பெற்ற மாருதி 800 காரின் தயாரிப்பினை நிறுத்தி சுசூகி ஆல்ட்டோ 800 காரினை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து சுசூகி ஆல்ட்டோ அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனை ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் பின்பு ஆல்ட்டோ புது வேரியண்ட்டுகளின் விற்பனை அதிகரித்தது. மாருதி ஆல்ட்டோ 800 கார் 10 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

மாருதி சுசூகி வேகன் ஆர்:

மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று வேகன் ஆர். மாதத்திற்கு சராசரியாக 13,000 கார்களுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில், அதிகரித்து வரும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து மாருதி வேகன் ஆர் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

மஹிந்திரா ஸ்கார்பியோ:

மஹிந்திரா ஸ்கார்பியோ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இருக்காய் வசதி அதிகம் என்பதால் குடும்பத்துடன் பயணிக்க ஸ்கார்பியோ ஏற்ற வாகனமாக அமைந்தது. ஸ்கார்பியோ:அறிமுகமானது முதல் ஒவ்வொரு மாடல்களிலும் பல்வேறு கூடுதல் வசதிகளுடன் உட்புற மற்றும் வெளிப்புற மாற்றங்களை செய்தது மஹிந்திரா நிறுவனம்.எஸ்-2, எஸ்-4, எஸ்-6, எஸ்-8 மற்றும் எஸ்-10 ஆகிய வேரியண்ட்டுகளில் ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்துது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

ஹூண்டாய் ஐ20:

ஹேட்ச்பேக் மாடல் கார்களில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை ஈட்டிதந்தது ஹூண்டாய் ஐ10 இதன் உற்பத்தியை கடந்த 2017ம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் நிறுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் ஹூண்டாய் i20 காரை அறிமுகம் செய்தது. ஹூண்டாய் i20 குறைந்த விலை பிரீமியம் ஹாட்ச்பேக் கார் என விற்பனைக்கு அறிமுகமானது. ஆரம்ப கட்டத்தில் விற்பனையில் கடுமையாக தடுமாறிய ஹூண்டாய் I20 பின்பு அதிக விற்பனையான கார்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

ஹூண்டாய் சாண்ட்ரோ:

1996ம் ஆண்டு முதன் முதலாக சாண்ட்ரோ மாடலுடதான் இந்திய கார் சந்தையில் நுழைந்து ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவின் இரண்டாவது கார் நிறுவனமாக உயர்ந்துள்ளது. ஹேட்ச்பேக் கார் செக்மெண்டில் முத்திரை பதித்த காராக சாண்ட்ரோ வலம்வந்தது. 1998 - 2014 இதன் காலகட்டமாகும். குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உட்புற இடவசதி என வருடக்கணக்கில் உழைக்கும்இக்கார் இந்திய சிறு குடும்பங்களுக்கு பிடித்த காராக இருந்து வந்தது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

டொயோட்டா ஃபார்ச்சூனர்:

பிரிமியம் எஸ்யூவி ரக மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் இந்தியர்களின் நம்பர்-1 சாய்ஸ். இந்நிலையில் 2016ம் ஆண்டு துவக்கத்தில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வந்த பின்னர், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நெருக்கடி முற்றியது. இதனை உணர்ந்து கொண்டு 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது டொயோட்டா. ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் 10,000க்கும் அதிகமான புக்கிங்குகளை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெற்றது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

ஃபோர்டு எண்டெவர்:

கரடுமுரடான சாலைகள் மற்றும் மோசமான சூழல்களில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற தொழில்நுட்பமும், கட்டமைப்பும் கொண்ட 'உண்மையான' எஸ்யூவி மாடல்கள் என்று பார்க்கும்போது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அப்படி, அனைத்து விதத்திலும் உண்மையான எஸ்யூவி ரக கார்களை பட்டியலிடும்போது, அதில், சிறப்பான தேர்வுகளில் ஒன்றாக ஃபோர்டு எண்டெவர் விளங்குகிறது. ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையாகிறது.எண்டெவர் எஸ்யூவி 3 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

ஹோண்டா சிட்டி:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையாக தேர்வாக இருந்து வருகிறது. 2017ம் ஆண்டு துவக்கத்தில் மாருதி சியாஸ் காரால் ஹோண்டா சிட்டி காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஹோண்டா சிட்டி விற்பனையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தவிர்க்க மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா சிட்டி கார் எஸ், எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனையில் உள்ளது.

10 வருட சவால் : கார்கள் 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்திருக்கும்?

டாடா நானோ:

ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தர வேண்டும் என்ற டாடா நிறுவன முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் முயற்சியில் 2009-ம் ஆண்டில் இந்தியச் சாலைக்கு வந்த கார் நானோ.முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் என்பதால், நானோவை காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளும், போராட்டங்களுக்கும் போதிய பலன் கிட்டவில்லை.தற்போது மின்சார டாடா நானோ கார் சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
India's Most Popular Cars in 10 year challenge- Read in Tamil
Story first published: Friday, January 18, 2019, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X