இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலடி எடுத்து வைத்தது. அந்நிறுவனத்தின் ஹெக்டர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுதான் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் மாடல் ஆகும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் (MG ZS EV) காரை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு இதுதான்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இதுவும் எஸ்யூவி ரக கார்தான். ஆனால் இது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. எனவே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இதில், இங்கிலாந்து, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

அதற்கு முன்னதாக, இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த தகவல் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தற்போது இன்னும் அதிகரித்துள்ளது.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடவுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 4,314 மிமீ, அகலம் 1,809 மிமீ, உயரம் 1,620 மிமீ. இதன் மூலம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை காட்டிலும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் பெரியதாக இருக்கும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 150 எச்பி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 44.5kWh லித்தியம்-அயான் பேட்டரியை எம்ஜி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7kW ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், முழுமையாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 50kW ஃபாஸ்ட் டிசி சார்ஜரை பயன்படுத்தினால், 40 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் ஏறி விடும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டுமே ஆரம்பத்தில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு அதன்பின்பே விற்பனை விரிவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 20 முதல் 22 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போட்டியாளரான ஹூண்டாய் கோனா கார் 23.71 லட்ச ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்து எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா காருக்கு அடுத்து எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் எப்படி வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறதோ, அதேபோலவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பஜாஜ் சேத்தக் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

துவரை அர்பனைட் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பஜாஜ் நிறுவனத்தின் பெரும் புகழ்பெற்ற சேத்தக் ஸ்கூட்டர் பெயரிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சில் பழைய பஜாஜ் சேத்தக் கியர் ஸ்கூட்டர் நெருங்கிய பந்தத்தை பெற்றுள்ளது. எனவே, அதே பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பதன் மூலமாக மிக எளிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதுவரையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அனைத்தும் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள்தான் அறிமுகம் செய்தன. ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனிப் பிரிவாக செயல்படுவதால், வாடிக்கையாளர்களிடம் அவ்வளவு நெருக்கமாக இன்னும் சேரவில்லை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் டீலர் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆனால், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த சந்தையில் முதலாவதாக களமிறங்கியுள்ளது. மேலும், பட்டித் தொட்டியெங்கும் பரவி இருக்கும் சேத்தக் பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது மிகப்பெரிய சாதக விஷயமாக இருக்கும். வலுவான டீலர்ஷிப் நெட்வொர்க்கையும் கைவசம் வைத்துள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் மிக அற்புதமாக இருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கூறலாம். பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மார்க்கெட்டில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிக நேர்த்தியான, கவரும் டிசைனிலான ஸ்கூட்டராக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது நிச்சயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறுவதுடன், புதிய பாதையை அமைக்கும் என்று கருதலாம்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும், டெல்லியிலிருந்து புனே நகருக்கு பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அணிவகுப்பு பயணத்தையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துவங்கி வைத்தார். இதன்மூலமாக, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப வல்லமையை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது பார்வைக்குத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், தொடு உணர் வசதியுடன் கட்டுப்பாட்டு பட்டன்கள் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 6 வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐபி-67 தரத்திற்கு இணையான என்சிஏ செல்கள் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 5 - 15 ஆம்பியர் எலெக்ட்ரிக்கல் பாயிண்ட் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும். பேட்டரியில் மின் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பமும் உள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது, 95 கிமீ தூரமும், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கினால் 85 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி புனே நகரின் அருகிலுள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆலையில் கடந்த மாதம் 26ந் தேதி துவங்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திப் பிரிவில் 80 சதவீதம் பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஆண்டு இறுதியில் விலை அறிவிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதம் முதல் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசத்தலான டிசைன், ஸ்டீல்பாடி, டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுடன் கலக்கலாக வர இருக்கிறது புதிய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர். ரூ.1.30 லட்சம் ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India-spec MG ZS Electric SUV To Be Unveiled In December 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X