மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

மோடி அரசின் அதிரடியால், இந்தியா அடையும் என கணிக்கப்பட்டுள்ள இந்த வளர்ச்சி குறித்து தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்களை சென்று சேர்வதில், இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு தடைக்கற்கள் இருக்கின்றன.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லை என்பது போன்றவைதான் அந்த தடைக்கற்கள். இந்த தடைக்கற்களை தகர்த்து, நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகமாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எண்ணம்.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் ஆகியவற்றை இதில் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எனலாம்.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

மத்திய அரசு எடுத்து வரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் மின்சார வாகன மார்க்கெட் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் வருங்காலங்களில் மேலும் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் வரும் 2026ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 36 சதவீதம் வளர்ச்சியடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 3,65,920 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வருகின்ற 2026ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 36 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக ஐஇஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஐஇஎஸ்ஏ என்பது இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ் (India Energy Storage Alliance - IESA) என்பதன் சுருக்கம். எனர்ஜி ஸ்டோரேஜ் உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் மற்றும் பவர் எலெக்ட்ரானிக் நிறுவனங்களை உள்ளடக்கிய 96 ஸ்டாக்ஹோல்டர்களின் கூட்டணிதான் ஐஇஎஸ்ஏ.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்தியாவின் உள்நாட்டு எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் 2019 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் 36 சதவீதம் வளர்ச்சியடையும் என ஐஇஎஸ்ஏ தற்போது கணித்துள்ளது. அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களின் விற்பனை வளர்ச்சி எப்படி இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

கடந்த 2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சார்ஜர்களின் விற்பனை வெறும் 1,000 யூனிட்களுக்கும் கீழாகதான் இருந்தது. வரும் 2026ம் ஆண்டில் இது 50,000 யூனிட்களை தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பப்ளிக் சார்ஜிங் பாயிண்ட்கள், 520 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பிடப்பட்ட முதலீட்டுடன் வளர்ச்சியடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் வளர்ச்சியடைவது நன்மை பயப்பதாகவே இருக்கும். ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும்.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இதனால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதுடன், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.

மோடி அரசின் மேஜிக்... அசூர வளர்ச்சி காணும் இந்தியா... இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

அந்த நாடுகளுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற விஷயத்தில் இந்தியாவும் தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இது தொடர்பான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

English summary
Indian Electric Vehicle Market Expected To Grow 36 Per cent Annually Till 2026. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X