அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்த பெரும் மோசடியை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய ஹீரோவின் வேலையை அமெரிக்க நிறுவனம் திடீரென பறித்துள்ளது. இதுதொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) குழுமம். ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமம் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்தான் இயங்கி வருகின்றன.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஆடி, பென்ட்லீ, புகாட்டி, லம்போர்கினி, போர்ஷே மற்றும் ஸ்கோடா உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டுகாட்டி பிராண்டின் கீழ் மோட்டார்சைக்கிள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இப்படிப்பட்ட சூழலில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் தற்போது உலகம் முழுக்க பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இன்றைய தேதி வரை ஃபோக்ஸ்வேகன் குழுமம் உலகம் முழுக்க 33 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகையை அபராதமாக செலுத்தியுள்ளது. இதில், அமெரிக்காவில் செலுத்தப்பட்ட அபராத தொகை மட்டும் 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் உண்டாக்கிய மாசு உமிழ்வு மோசடியில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் சிக்கி கொண்டதே இதற்கு முக்கிய காரணம். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாசு உமிழ்வு மோசடி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இந்த மாசு உமிழ்வு மோசடியை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஹேமந்த் கப்பன்னா மற்றும் அரவிந்த் திருவேங்கடம் ஆகியோர்தான் அந்த 2 இந்தியர்கள். இதில், அரவிந்த் திருவேங்கடம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையை சேர்ந்தவர்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

பொதுவாக கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக புகை அளவு சோதனைகளில் வெற்றி பெற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவு புகையை மட்டுமே கார்கள் வெளியிட வேண்டும்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டுமே புகை அளவு சோதனைகளுக்கு கார்கள் உட்படுத்தப்படுகின்றன. இந்த புகை அளவு சோதனையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ஃபோக்ஸ்வேகன் குழுமம் மோசடி செய்தது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

அதாவது புகை அளவு சோதனைக்கு உட்படுத்தப்படும்போது ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள், நிர்ணயம் செய்யப்பட்ட அளவு புகையை மட்டுமே வெளியிடுவது போல் காட்டும். ஆனால் வழக்கமாக சாலைகளில் ஓடும்போது நஞ்சு நிறைந்த புகையை அதிக அளவில் கக்கும்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இதற்காக பிரத்யேகமான மென்பொருள் (Software) ஒன்றை ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது கார்களில் பயன்படுத்தியது. புகை அளவு சோதனை செய்யப்படும் சமயத்தில், நிர்ணயிக்கப்பட்ட புகையை மட்டுமே வெளியிடுவதாக காட்டுவதே இந்த சாப்ட்வேரின் வேலை.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இதன் மூலமாக ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள் புகை அளவு சோதனைகளில் மிக எளிதாக வெற்றி பெற்றன. ஆனால் ஃபோக்ஸ்வேகன் குழும கார்களில் செய்யப்பட்ட மோசடி பின் நாட்களில் கண்டறியப்பட்டது. அதாவது வழக்கமாக சாலைகளில் ஓடும்போது அவை நைட்ரஸ் ஆக்ஸைடு நச்சு புகையை கக்கின.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இது நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் 40 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியை ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்பு கொள்ளவும் செய்தது. உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 1.10 கோடி ஃபோக்ஸ்வேகன் குழும டீசல் கார்களில், இந்த மோசடி சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருந்தது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இதில், மோசடி சாப்ட்வேர்களுடன் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட டீசல் கார்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம். இந்த மோசடி அம்பலமானதை தொடர்ந்துதான் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு உச்சகட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்த மெகா மோசடியை கண்டறிய கடந்த 2013ம் ஆண்டு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்போது ஹேமந்த் கப்பன்னாவும், அரவிந்த் திருவேங்கடமும் அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்தனர்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் மோர்கன்டவுன் எனும் நகரில் செயல்பட்டு வரும் மேற்கு விர்ஜினியா பல்கலைகழகம், கார் புகை உமிழ்வு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றது. இந்த பல்கலைகழகத்தின் இன்ஜினியரிங் மாணவர்கள் குழு, ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களை கடந்த 2013ம் ஆண்டு சோதனை செய்தது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இதில், இந்தியர்களான ஹேமந்த் கப்பன்னா மற்றும் அரவிந்த் திருவேங்கடம் ஆகியோருடன், மார்க் பெஸ்க் என்பவரும் இருந்தார். இவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். குற்றம் நடைபெற்றிருப்பதை தங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து விட்ட அவர்கள், அதற்கான ஆதாரங்களை திரட்ட தொடங்கினர்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

அதன்பின் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதை அவர்கள் ஆவணப்படுத்தினர். என்றாலும் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி அறிக்கை அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்புதான் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் குட்டு வெளிப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முகத்திரையை கிழித்தது அவர்களது ஆராய்ச்சிதான் என சொல்லலாம்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இதில், ஹேமந்த் கப்பன்னாவின் பங்களிப்பு மெச்சத்தக்க வகையில் இருந்தது. இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூர். இந்தியாவில் பிறந்திருந்தாலும், கடந்த 17 ஆண்டுகளாக ஹேமந்த் கப்பன்னா அமெரிக்காவில்தான் வசித்து வருகிறார். படிப்பையும் கூட அங்குதான் முடித்தார்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மோசடியை அம்பலப்படுத்தியதன் மூலம் புகழ்பெற்ற ஹேமந்த் கப்பானா, டாக்டரேட் முடித்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜென்ரல் மோட்டார்ஸ் (GM - General Motors) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மற்றொரு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும். இந்த சூழலில், இந்திய ஹீரோ ஹேமந்த் கப்பன்னாவை, ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் திடீரென வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

கடந்த பிப்ரவரி மாதமே ஹேமந்த் கப்பன்னா வேலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என அந்த செய்தி கூறுகிறது. வேலையில் இருந்து நீக்கப்பட்டால், வேலை விசா அடிப்படையில் 60 நாட்கள் கருணை காலம் வழங்கப்படும்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

ஆனால் இந்த கருணை காலத்திற்குள் ஹேமந்த் கப்பன்னா வேறு வேலைக்கு செல்லவில்லை. இதனால் கருணை காலம் காலாவதியாகி விட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊரான பெங்களூருக்கு அவர் திரும்பி வந்து விட்டார்.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

வேலையை விட்டு நீக்கிய சமயத்தில், 2 மாத சம்பளத்தையும் இந்தியாவிற்கு ஒன் வே டிக்கெட்டையும் மட்டும் வழங்கியுள்ளது ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம். ஆனால் ஹேமந்த் கப்பன்னாவை வேலையை விட்டு நீக்கியதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்

Image Courtesy: Nick Hagen/The New York Times

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஹேமந்த் கப்பன்னா தவிர மேலும் 4,000 ஊழியர்களை வேலையை விட்டு செல்லும்படி அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் உலகையே உலுக்கிய ஒரு பெரும் முறைகேட்டை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஹேமந்த் கப்பன்னாவை வேலையை விட்டு நீக்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Indian Engineer Who Caught Volkswagen Emission Scandal Fired In US. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X