அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் வாங்கப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மேலும், எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு முன்மாதிரியாக அரசுத் துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக புதிய மின்சார கார்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இதுவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ எலெக்ட்ரிக் கார்கள் அரசு துறை பயன்பாட்டிற்காக ஆர்டர் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை மதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அதிக பயண தூரத்தை வழங்குவதும், ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்ததால், தனிநபர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில், ஹூண்டாய் கோனா காரின் சிறப்பம்சங்களை பார்த்த மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நான்கு பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமாக செயல்படும் EECL தற்போது 10 ஹூண்டாய் கோனா கார்களை அரசுத் துறை பயன்பாட்டிற்காக வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. இதில், 4 ஹூண்டாய் கோனா கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஆறு கார்களும் விரைவில் டெலிவிரி தரப்பட உள்ளன.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் கோனா கார் ரூ.23.71 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. டாடா டிகோர் மற்றும் மஹிந்திரா வெரிட்டோ கார்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம்தான். இருந்தாலும், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்பது எல்லோரையும் கவர்ந்து வருகிறது.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அத்துடன், பெட்ரோல், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு இணையான செயல்திறனை இந்த புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வழங்குகிறது. இந்த காரில் இருக்கும் 39.2 kWh பேட்டரியும், 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய 4 டிரைவிங் மோடுகள் உள்ளன. அத்துடன், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணி 10 நிமிடங்கள் தேவைப்படும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்திற்குள் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

அரசு அதிகாரிகளுக்காக வாங்கப்படும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ரியர் ஸ்பாய்லர் அமைப்பு, லெதர் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதனால், இந்த காருக்கான மதிப்பும், வரவேற்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

Most Read Articles
English summary
The Indian government prefers Hyundai Kona EV over other EV models available in the country. The governing bodies have already started using the Kona EV and has already placed an initial order with Hyundai Motor India.
Story first published: Thursday, October 24, 2019, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X