TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிய இந்தியர்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்...
மிகவும் விலை உயர்ந்த 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியர் ஒருவர் தற்போது மொத்தமாக வாங்கியுள்ளார். பலவீனமான இதயம் உள்ளவர்கள் இவற்றின் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மிகப்பிரபலமான தொழிலதிபராக திகழ்ந்து வருபவர் ரூபேன் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபேன் சிங்கிற்கு, இங்கிலாந்து நாட்டு மக்கள் சூட்டியிருக்கும் செல்லப்பெயர் ''பிரிட்டீஸ் பில்கேட்ஸ்'' என்பதாகும்.
கடந்த 1990களில் இங்கிலாந்து முழுவதும் மிக பிரபலமாக விளங்கிய ''மிஸ் ஏட்டிட்யூடு'' (Miss Attitude) என்ற ஆடை விற்பனை நிறுவனம்தான் ரூபேன் சிங்கால் முதன் முதலில் தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனத்தை தொடங்கியபோது ரூபேன் சிங்கிற்கு வயது 17 மட்டுமே.
ஆனால் நாளடைவில் ஏற்பட்ட எதிர்பாராத நஷ்டம் காரணமாக 'மிஸ் ஏட்டிட்யூடு'' நிறுவனத்தை விற்பனை செய்யும் சூழலுக்கு ரூபேன் சிங் தள்ளப்பட்டார். இருந்தாலும் கூட மனம் தளராமல் போராடிய ரூபேன் சிங் இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தார்.
தற்போது ஆல்டேபிஏ (AlldayPA) மற்றும் ஐஷர் கேப்பிட்டல் (Isher Capital) உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக ரூபேன் சிங் பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் இங்கிலாந்து அரசிலும் ரூபேன் சிங் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
முன்பு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டோனி பிளேர்தான், ரூபேன் சிங்கிடம் உள்ள தொழில்துறை தொடர்பான திறன்களை கண்டு அவரை அரசு பதவிக்கு அழைத்தார். சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் சேவையாற்றுமாறு ரூபேன் சிங்கை அழைத்தது டோனி பிளேர்தான்.
MOST READ: ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!
ரூபேன் சிங் சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். அத்துடன் கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். இந்த சூழலில் பத்திரிக்கை செய்திகள் மற்றும் சமூக வலை தளங்களில், ரூபேன் சிங்கின் பெயர் கடந்த ஆண்டு அதிகம் அடிபட்டது.
ரூபேன் சிங் செய்த 7 நாள் சவால்தான் (7 Days Challenger) இதற்கு காரணம். சீக்கியரான ரூபேன் சிங் டர்பன் அணியும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், ரூபேன் சிங்கின் டர்பனை கிண்டல் செய்தார்.
எனவே அவருக்கு தக்க பாடம் புகட்டும் விதமாக, தான் தலையில் கட்டும் டர்பனின் நிறத்திற்கு மேட்ச் ஆன ரோல்ஸ் ராய்ஸ் கார்களில், ஒரு வாரம் முழுக்க கெத்தாக வலம் வந்தார் ரூபேன் சிங். உதாரணத்திற்கு வெள்ளை நிற டர்பன் என்றால், வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார்.
இதற்காகவே மிகவும் விலை உயர்ந்த 7 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர் வாங்கினார். அத்துடன் ஒவ்வொரு நாளும் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடவும் செய்தார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆனதால், செய்திகள் மற்றும் சமூக வலை தளங்களில் ரூபேன் சிங் அதிகம் பேசப்பட்டார்.
இந்த சூழலில் சுமார் ஓராண்டு இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் பத்திரிக்கை செய்திகளில், ரூபேன் சிங்கின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது. இதற்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
MOST READ: 2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!
6 புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ரூபேன் சிங் தற்போது வாங்கியுள்ளார். இதில், 3 ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) கார்களும், 3 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார்களும் அடங்கும்.
இதற்கு ரூபேன் சிங் சூட்டியிருக்கும் பெயர் ஜூவல்ஸ் கலெக்ஸன் (Jewels Collection) என்பதாகும். மாணிக்கம், மரகதம் மற்றும் நீலமணி கற்கள் ஆகியவற்றின் நிறங்களால் ஈர்க்கப்பட்டு, அதற்கு ஏற்ப 6 கார்களும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.
எனவேதான் இதற்கு ஜூவல்ஸ் கலெக்ஸன் என ரூபேன் சிங் பெயர் சூட்டியுள்ளார். கார்டாக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஒவ்வொரு பாந்தம் மற்றும் கல்லினன் காரிலும், மாணிக்கம், மரகதம் மற்றும் நீலமணி கற்கள் பெயிண்ட் ஜாப் செய்யப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த 6 கார்களையும் ஓரிரு நாட்களுக்கு முன்புதான், ரூபேன் சிங்கிற்கு டெலிவரி செய்துள்ளது. உடனே ரூபேன் சிங் அதனை புகைப்படம் எடுத்து வெளியிட, வழக்கம் போல சமூக வலை தளங்களில் அது வைரலாக பரவி கொண்டுள்ளது.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரின் ஆரம்ப விலை சுமார் 9 கோடி ரூபாய். அதே நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை சுமார் 7 கோடி ரூபாய். ஆக மொத்தம் இந்திய மதிப்பில் சுமார் 48 கோடி ரூபாய்க்கு இந்த 6 கார்களையும் வாங்கி குவித்துள்ளார் ரூபேன் சிங்!!!
இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். ஜூவல்ஸ் கலெக்ஸன் கார்கள் கைக்கு கிடைப்பதற்கு முன்னதாகவே ரூபேன் சிங்கிடம் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன.
தற்போது ஜூவல்ஸ் கலெக்ஸன் கார்களையும் ரூபேன் சிங் தன் வசப்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவரிடம் உள்ள ஒட்டுமொத்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் தவிர இன்னும் பல விலை உயர்ந்த கார்களையும் ரூபேன் சிங் வைத்துள்ளார்.
இதில், ஃபெராரி எப்12 பெர்லினேட்டா லிமிடெட் எடிசன் (Ferrari F12 Berlinetta Limited Edition) குறிப்பிடத்தகுந்தது ஆகும். உலகில் ஒரே ஒரு ஃபெராரி எப்12 பெர்லினேட்டா லிமிடெட் எடிசன் கார் மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனையும் ரூபேன் சிங் தன்வசப்படுத்தி விட்டார்.
இதுதவிர புகாட்டி வேரோன் (Bugatti Veyron), போர்ஷே 918 ஸ்பைடர் (Porsche 918 Spyder), லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) ஆகிய விலை உயர்ந்த கார்களும் ரூபேன் சிங்கிடம் உள்ளன.
7-8 லட்ச ரூபாயில், மாருதி சுஸுகி போன்ற ஒரு சிறிய காரை சொந்தமாக வாங்கவே பலர் சிரமப்பட்டு கொண்டிருக்கும் சூழலில், பல கோடி ரூபாய்களுக்கு கார்களை வாங்கி குவித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கிறார் ரூபேன் சிங்.
அத்துடன் ரூபேன் சிங்கிடம் சில ஜெட் விமானங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தனது சமூக வலை தள பக்கங்களில், அவ்வப்போது அவற்றின் புகைப்படங்களை வெளியிடுவதை ரூபேன் சிங் வழக்கமாக வைத்துள்ளார்.