வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி... இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு...

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து விட்டு, இந்தியா முழுக்க மோடி அலை வீசியது. அப்போது குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி வழங்கிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இதற்கு ஓர் முக்கிய காரணம்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

இதன் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மிக எளிதாக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்து விட்டது. நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியிலும் அமர்ந்து விட்டார். பிரதமராக பதவியேற்ற பின்பும் கூட நாட்டு மக்களுக்கு மோடி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் தற்போது சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ''உர்ஜா சங்கம்'' மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அப்போது கச்சா எண்ணெய் தேவைக்காக நாம் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும் என அவர் பேசினார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அதாவது கடந்த 2013-14ம் நிதியாண்டில், இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில், சுமார் 77 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொண்டது. இதனை 2022ம் ஆண்டு 67 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட 2022ம் ஆண்டு, இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆண்டாகும். அத்துடன் வரும் 2030ம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதியாக குறைக்க வேண்டும் என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சொன்னதற்கு மாறாக அனைத்தும் தலை கீழாக நடந்து கொண்டுள்ளது. கடந்த 2015-16ம் நிதியாண்டில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80.6 சதவீதத்தை இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து கொண்டிருந்தது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அதன்பின் வந்த நிதியாண்டில், கச்சா எண்ணெய் தேவைக்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை 81.7 சதவீதமாக அதிகரித்தது. அதே சமயம் 2017-18ம் நிதியாண்டில், தனது ஒட்டுமொத்த தேவையில், 82.9 சதவீத கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிடம் இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்தது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அதாவது கச்சா எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும் என மோடி குறிப்பிட்டதற்கு மாறாக, வெளிநாடுகளை சார்ந்து இருந்தும் நிலை அதிகரித்து கொண்டே வந்துள்ளது இந்த புள்ளி விபரங்களின் மூலம் உறுதியாகிறது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

இந்த சூழலில் கடந்த 2018-19ம் நிதியாண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு நிலை 83.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் துறை அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 184.7 மில்லியன் டன்களாக இருந்தது. இது அதன்பின் வந்த நிதியாண்டுகளில் முறையே 194.6 மில்லியன் டன்களாகவும், 206.2 மில்லியன் டன்களாகவும் அதிகரித்துள்ளது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அதே சமயம் கடந்த 2018-19ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் நுகர்வு 211.6 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வேண்டுமானால், உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதே யதார்த்த நிலை.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

ஆனால் அதற்கு நேர் எதிராக உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியா 36.9 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் 2016-17ம் நிதியாண்டில் இது 36 மில்லியன் டன்களாக குறைந்து விட்டது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

அதன்பின் வந்த நிதியாண்டுகளிலும் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. 2017-18ம் நிதியாண்டில், இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 35.7 மில்லியன் டன்களாக குறைந்தது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19ம் நிதியாண்டில் இது வெறும் 34.2 மில்லியன் டன்களாக சரிந்து விட்டது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

கடந்த 2018-19ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவு செய்த தொகை 111.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால் இதற்கு முந்தைய நிதியாண்டில் இது 87.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்தது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

முன்னதாக கடந்த 2015-16ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்ட தொகை 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை அதிகரித்தால், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம். அதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்து கொண்டுதான் உள்ளது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம் இந்தியா-2 திட்டத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

மீண்டும் மக்களை ஏமாற்றிய மோடி... சொன்னதை செய்யாததால் இந்தியாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இதுதான்...

ஆனால் இந்த பணிகள் வேகம் எடுத்து, எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக விரைவாக மக்களை சென்றடைந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இந்தியாவை சூழவுள்ள அபாயத்தில் இருந்து தப்ப முடியும். இல்லாவிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமே.

Most Read Articles
English summary
India's Crude Oil Import Increased To 84 Per cent. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X