ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் மோடியை ஓவர் டேக் செய்துள்ளார். இதன் மூலம் இந்த சாதனையை படைத்த இந்தியாவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது சந்திரபாபு நாயுடு அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்த சூழலில், விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை (Extensive Electric Vehicle Policy) வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா தற்போது பெற்றுள்ளது. இதன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளன.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

இதன்படி வரும் 2024ம் ஆண்டு முதல், ஆந்திராவில் பெட்ரோல், டீசல் கார்கள் பதிவு செய்யப்படாது. அதாவது பெட்ரோல், டீசல் கார்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்கள் வெளியிடும் புகையானது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் கார்களை பதிவு செய்வதை நிறுத்தும் பணிகள் முதற்கட்டமாக அமராவதி நகரில் அமல் செய்யப்படும். அமராவதிதான் ஆந்திராவின் தலைநகராக உருவெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதியை தலைநகராக நிர்மாணிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர ஆந்திர மாநில சாலைகளில், அடுத்த 5 ஆண்டுகளில், 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட வைக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு ஆந்திர மாநில அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ஆந்திர அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் மூலம், அம்மாநிலத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

அதே சமயம் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் (Andhra Pradesh State Road Transport Corporation-APSRTC) இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் அனைத்தையும், வரும் 2024ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெட்ரோல், டீசல் பங்க்குகளுக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Charging Stations) இன்னும் கட்டமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆந்திர பிரதேச அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஆந்திர மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற தெளிவான கொள்கைகள் இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

இந்தியாவிடம் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. எனவே சவுதி, கத்தார், ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிக அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகிறது.

நாட்டில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து பொருளாதாரம் பாதுகாக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

ஆனால் மத்திய அரசால் இன்னும் பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. முதலில் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

தற்போது அந்த இலக்கு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பதாக இருந்த இலக்கு தற்போது குறைந்தபட்சம் 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என மாற்றியமைக்கப்பட்டு விட்டது.

இந்த இலக்காவது எட்டப்படுமா? என்ற சந்தேகம் ஒரு பக்கம் நிலவி கொண்டுள்ள சூழலில்தான், விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்து அசத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு. தற்போதைய நிலையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திடமும் இதுபோல் விரிவான கொள்கைகள் இல்லை.

ஆனால் தெளிவான கொள்கைகளை வகுத்திருப்பதன் மூலமாக ஆந்திரா நிச்சயமாக இலக்கை எட்டும் என எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆந்திரா நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், தமிழகம் தற்போதுதான் தூக்கத்தில் இருந்தே எழுந்துள்ளது.

தமிழகத்திடமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தெளிவான கொள்கைகள் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக 2 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒரே அறிவிப்பில் மோடியை காலி செய்த சந்திரபாபு நாயுடு... இந்தியாவில் இதை செய்த முதல் முதல்வர் இவர்தான்

இதற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வங்கியிடம் கடனுதவி நாடப்பட்டுள்ளது. இதுதவிர 12 ஆயிரம் பிஎஸ்-4 ரக பேருந்துகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவை முன் உதாரணமாக கொண்டு, இதையாவது விரைவாக செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

முன்னதாக தமிழகத்திற்கு வரவிருந்த தென் கொரியாவை சேர்ந்த கியா கார் தொழிற்சாலை ஆந்திராவிற்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆட்சியாளர்கள் அதிகப்படியான லஞ்சம் கேட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ட்ரையல் புரொடக்ஸனும் தொடங்கி விட்டது. முதலீடுகளை குவிப்பதிலும், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிப்பதிலும் ஆந்திரா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுகிறது. ஆந்திராவை பார்த்து இனியாவது தமிழகம் திருந்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 9, 2019, 11:24 [IST]
English summary
India's First Extensive Electric Vehicle Policy Unveiled: Andhra To Ban Petrol, Diesel Cars By 2024. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X