திடீரென உருவான சிக்கல்... லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடி பதற்றம் அடைய காரணம் இதுதான்...

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை திடீரென பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த பிரச்னையை அவர் சமாளிக்காவிட்டால், ஆட்சியை இழக்க வேண்டியதிருக்கும்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்று கொண்டது. ஆனால் அதன்பின்பு மத்திய அரசு செயல்படுத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கின.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்பட நாட்டின் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை வரலாற்றில் முதல் முறையாக 90 ரூபாயை கடந்தது. அத்துடன் டீசல் விலையிலும் பல்வேறு விபரீதங்கள் அரங்கேறின.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

பொதுவாக இந்தியாவில் பெட்ரோலின் விலையை காட்டிலும் டீசலின் விலை சுமார் 10 ரூபாய்கள் வரை குறைவாகதான் இருக்கும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை அதிகம் ஆனது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த விபரீதம் அரங்கேறியது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் இத்தகைய விலை உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததற்கு, மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பும் முக்கிய காரணம்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் மிக அதிகப்படியாக விதிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர இதுவும் மிக முக்கியமான காரணம்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏனெனில் ஜிஎஸ்டி-யில் ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

ஆனால் நாடு முழுவதும் பரவலாக எழுந்த இந்த கோரிக்கை தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. வரிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

இவ்வாறு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்காததால் பிரதமர் மோடி மீது கடுமையான அதிருப்தி உருவானது. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியை பிடித்தன. ஆக மொத்தம் 5 மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

இந்த சூழலில் மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தலை போல், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வி விட கூடாது என பாஜக நினைக்கிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

எனவே மக்கள் மத்தியில் மீண்டும் நற்பெயரை பெற பாஜக முயன்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் முன்பு இருந்ததை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (ஜனவரி 14) ஒரு லிட்டர் பெட்ரோல் 72.79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 67.78 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்த விலையை காட்டிலும் இது குறைவுதான் என்றாலும் கூட, பொதுவாக பார்க்கையில் தற்போது இருப்பது மிக அதிகமான விலைதான் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

எனவே தற்போது இருப்பதை காட்டிலும் பெட்ரோல், டீசலின் விலையை இன்னும் குறைத்தாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் எரிபொருள் தேவை தற்போது அதிகரித்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

அதாவது கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையானது, 18.51 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் அதிகமாகும்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

இந்தியாவில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், வருங்காலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயரக்கூடிய அபாயம் நிலவுகிறது. ஒருவேளை தற்போது இருப்பதை காட்டிலும் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் அதிகமானால், லோக்சபா தேர்தலில் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடியை தொற்றிக்கொண்ட திடீர் பதற்றம் இதுதான்...

எனவே இந்த பிரச்னையை மத்திய அரசு எப்படி கையாள போகிறது? என்பதை எதிர்கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளன. ஏனெனில் மத்திய அரசு இந்த பிரச்னையை திறம்பட கையாளாவிட்டால், எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் தேர்தல் சமயத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அதன் விலையை வெகுவாக குறைக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

Source: Sikhsiyasat

Most Read Articles
English summary
India's Fuel Demand Increased By 3.2 Per cent In December. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X