பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

பெங்களூரை சேர்ந்த இன்ரேஸிங் நிறுவனம், இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியுள்ளது. இங்கு மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலமாக்கும் பெரும் இலக்கிற்கான முதல் அடி இதன்மூலம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motorsports), நாலு கால் பாய்ச்சலில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு பல்வேறு ரேஸிங் அகாடமிகள் உள்ளன. மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் அவை நின்று விடுவதில்லை. அவர்கள் களத்தில் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் வாய்ப்பு அளிக்கின்றன.

ரேஸிங் அகாடமிகளில், தொழில்முறை ரேஸர்கள் மூலம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் வலிமை, பிட்னஸ் சார்ந்தவையாகவே உள்ளன. ஆனால் தரமான தொழில்முறை ரேஸராக உருவெடுக்கும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கருவி ரேஸிங் சிமுலேட்டர் (Racing Simulator).

ரேஸிங் டிராக்குகளை நன்றாக புரிந்து கொள்ள டிரைவர்கள் அல்லது ரைடர்களை ரேஸிங் சிமுலேட்டர்கள் அனுமதிக்கின்றன. அத்துடன் கார் அல்லது மோட்டார் சைக்கிள்களின் விர்ச்சூவல் உணர்வை அவை வழங்குகின்றன. இன்னும் எளிதாக புரியும்படி சொல்வதென்றால், பந்தய களத்திற்கு செல்லும் முன்பாக தேவையான பயிற்சியை எடுத்து கொள்ள உதவும் ஒரு கருவிதான் ரேஸிங் சிமுலேட்டர்.

தொழில்முறை ரேஸராக உருவெடுக்க ரேஸிங் சிமுலேட்டர்களில் பயிற்சி பெறுவது அவசியம். ஆனால் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இன்னும் பெரிதாக வளரவில்லை. டாப்-லெவல் ரேஸர்களால் மட்டுமே ரேஸிங் சிமுலேட்டர்களில் பயிற்சி பெறுவதை சாத்தியப்படுத்தி கொள்ள முடிகிறது. ஏனெனில் ரேஸிங் சிமுலேட்டர்களின் விலை மிகவும் அதிகம். அவற்றை இறக்குமதிதான் செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் அப்படியான ஒரு நிலை தற்போது மாற தொடங்கியிருக்கிறது. இதற்கு இன்ரேஸிங் (INRacing) நிறுவனத்திற்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்திய ரேஸிங் சாம்பியன்களால் நடத்தப்படும் இன்ரேஸிங் நிறுவனம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்தது. இந்நிறுவனம் தனது முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியுள்ளது.

இன்ரேஸிங் நிறுவனத்தின் முதல் ரேஸிங் சிமுலேட்டர் என்ற வரையறைக்குள் அதன் பெருமையை அடக்கி விட முடியாது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரேஸிங் சிமுலேட்டர் இதுதான். முன்னாள் தேசிய ரேஸிங் சாம்பியன்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் இன்ரேஸிங் நிறுவனம் இந்த ரேஸிங் சிமுலேட்டரை தயாரித்துள்ளது.

இன்னும் நிறைய ஆர்வலர்களை மோட்டார் ஸ்போர்ட்ஸை நோக்கி ஊக்குவிக்க வேண்டும் மற்றும் ரேஸிங்கில் அவர்கள் தங்களின் இலக்குகளை அடைய உதவ வேண்டும் என்பதே இந்த ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியதன் நோக்கம் என பெருமையாக கூறுகிறது இன்ரேஸிங் நிறுவனம்.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இன்ரேஸிங் நிறுவனத்தின் பின்னால் உள்ள குழு:

சுமூகா ராவ் (Sumukha Rao) மற்றும் தீபக் சின்னப்பா (Deepak Chinnappa) ஆகியோரால் இன்ரேஸிங் நிறுவனம் நடத்தப்படுகிறது. இதில், சுமூகா ராவிற்கு இந்திய மற்றும் சர்வதேச மார்கெட்களில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. தொழில் செயல்பாடுகள், தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேலாண்மை ஆகியவற்றில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். மார்க்கெட்டை நன்கு படித்து டிமாண்ட்டை உணர்ந்து கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

மறுபக்கம் தீபக் சின்னப்பா திறமை வாய்ந்த ரேஸர். இவர் நான்கு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அத்துடன் இரண்டு முறை தேசிய கார்டிங் சாம்பியன் (National Karting Champion) பட்டத்தையும் தனதாக்கியுள்ளார். ஏழு வயது முதலே ரேஸிங் துறையில் அவர் இருக்கிறார். இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு பாராட்டுக்களை அவர் பெற்றுள்ளார். 2017 எம்ஆர்எஃப் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப்பில், வைஸ் சாம்பியனாக உருவெடுத்தது இதற்கு சமீபத்திய உதாரணம்.

MOST READ: டோல்கேட்டில் வைத்து வேல் முருகனை தாக்க முயன்றதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல் வெளியானது...

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இன்ரேஸிங்கின் முக்கிய டிரைவராக இருப்பவர் டிஜில் ராவ் (Tijil Rao).சுமூகா ராவ்வின் மகனான இவர் 2018 இந்திய தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் வைஸ் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது வெறும் 14 மட்டுமே. இளம் வயதிலேயே அசத்தி கொண்டிருக்கிறார் டிஜில் ராவ்.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இன்ரேஸிங் சிமுலேட்டர்:

இன்ரேஸிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ரேஸிங் சிமுலேட்டரின் இருக்கையானது உயர்தரமான சௌகரியத்தை வழங்குகிறது. அனைவருக்கும் சௌகரியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு உடல்வாகு கொண்டவர்கள் மத்தியில், இந்த இருக்கைகள் விரிவாக சோதனை செய்யப்பட்டுள்ளன. த்ரஸ்ட்மாஸ்டர், மேட்கேட்ஸ், ஃபனாடெக் மற்றும் லாகிடெக் உள்பட மார்க்கெட்டில் கிடைக்க கூடிய எந்தவொரு பிராண்டட் கேமிங் ஸ்டியரிங் வீல் மற்றும் ஃபுட் பெடல்களுடனும் இன்ரேஸிங் சிமுலேட்டர் இணக்கமாக உள்ளது. டெலஸ்கோபிக் மற்றும் டில்ட் ஃபங்ஷன்கள் வழியாக, டிரைவர் சௌகரியத்திற்கு ஏற்ப ஸ்டீயரிங் வீல்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

டிரைவர் இருக்கையில் நாங்கள்...

சில்வர்ஸ்டோன் பார்முலா 1 சர்க்யூட்டில், விர்ச்சூவல் பார்முலா 1 காருடன் ரேஸிங் சிமுலேட்டரை நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அதனை ஒரு மகத்தான அனுபவம் என கூறலாம். இது மிகவும் யதார்த்தமாக உள்ளதால், சுற்றிலும் என்ன நடக்கிறது? என்பதே தெரியாத அளவிற்கு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். ரேஸிங் சிமுலேட்டரை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை. ஆனால் கிட்டத்தட்ட ரேஸ் டிராக்கில் கார் ஓட்டுவது போன்ற உண்மையான அனுபவத்தை அது எங்களுக்கு கொடுத்தது. நீங்கள் உங்கள் வீட்டின் சௌகரியத்தை விட்டு வெளியேறாமல், பல்வேறு ரேஸிங் டிராக்குகள் மற்றும் ரேஸிங் சூழல்களுக்கு சென்று வந்த உணர்வை இது வழங்குகிறது. ஆன்லைன் மூலமாக வேறு யாரையேனும் எதிர்த்து போட்டியிடவும் முடியும். டிராக்கிற்கு செல்லும் முன்பாக உங்களை ஷார்ப் ஆக்கி கொள்ள இது உதவும்.

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இன்ரேஸிங் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள்:

இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களை தொழில்முறை இ-ஸ்போர்ட் (eSport) மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களாக வளர்த்தெடுக்க இந்த ரேஸிங் சிமுலேட்டரை பயன்படுத்தலாம் என இன்ரேஸிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிமுலேட்டர்களை உருவாக்குவது முதல் நாடு முழுவதும் பல்வேறு இ-ஸ்போர்ட் ரேஸிங் லீக்குகளை நடத்துவது வரை என தனது செயல்பாடுகளை விரிவாக்கவும் செய்யவும் இன்ரேஸிங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

MOST READ: வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

பெரும் இலக்கிற்கான முதல் அடி... இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியது இன்ரேஸிங்!

இன்ரேஸிங் பார்ட்னர்கள்:

மொமண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Momentum Motorsports): இது சென்னையை சேர்ந்த தொழில்முறை ரேஸிங் அணி. பார்முலா எல்ஜிபி 1300 ரூக்கி கிளாஸில் இவர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த தொழில்முறை ரேஸிங் அணியில் உள்ள முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவராக தீபக் சின்னப்பா உள்ளார். அதே சமயம் அவர்களின் ரேஸிங் டிரைவர் லைன் அப்பில் டிஜில் ராவ் முக்கிய பங்கு வகிக்கிறார்.

டபிள்யூஇ ஃபிட்னஸ் (WE Fitness): இது தொழில்முறை உடற்பயிற்சி கூடம். டிஜில் ராவ் ரேஸ்களுக்கு தயாராகும்போது, ஒட்டுமொத்த ஷெஸன் முழுவதும் இவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

லாகிடெக் (Logitech): ஸ்டீயரிங் வீல்கள் மற்றும் புட் பெடல்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவுவதற்காக, லாகிடெக்குடன் இன்ரேஸிங் நிறுவனம் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும், விலை உள்ளிட்ட விபரங்களை அறியவும் இன்ரேஸிங் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Email: sales@inracing.in

பேஸ்புக்

இன்ஸ்டாகிராம்

டிவிட்டர்

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இந்தியாவில் இ-ஸ்போர்ட் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றின் எதிர்காலத்திற்காக இன்ரேஸிங் நிறுவனம் மிகப்பெரிய திட்டங்களை வைத்துள்ளது. இந்த மிகப்பெரிய இலக்கிற்கான முதல் படிதான் இந்த ரேஸிங் சிமுலேட்டர். அனேகமாக கேம் தொடங்கி விட்டது என சொல்லலாம்!!!

Most Read Articles

English summary
INRacing — India’s First Homogeneous Racing Simulator; A Must-Try For Motorsport Fanatics!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more