மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

இந்திய சாலைகளில் வேறு எந்த ஒரு நிறுவனத்தின் காரை விடவும், மாருதி சுஸுகி கார்களைதான் அதிகமாக பார்க்க முடியும். இந்திய மக்களுக்கு ஏற்ற வகையில், பட்ஜெட் விலையில் கார்களை தயாரித்து விற்பனை செய்வதால், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மீது ஏராளமான விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

குறிப்பாக அந்நிறுவனத்தின் கார்கள் தரம் இல்லாதவை, விபத்துக்களின்போது பயணிகளை காப்பாற்றாது என்பது போன்ற விமர்சனங்கள்தான் அதிகம். ஆனால் இப்படி விமர்சிப்பவர்களின் தேர்வு கூட மாருதி சுஸுகியாகதான் இருக்கும். ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமே நடுத்தர மக்களுக்கு ஏற்ற கார்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்கிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

மேலும் ஸ்பேர் பார்ட்ஸ்கள் எளிதாக கிடைப்பது, நாடு முழுக்க சர்வீஸ் வசதி போன்றவையும், ஒருவர் மாருதி சுஸுகி நிறுவன கார்களை தேர்வு செய்ய முக்கிய காரணங்களாக உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்பான ஆச்சரிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

70 ஆயிரம் லிட்டர் பெயிண்ட்

மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு நாளைக்கு 5,000 கார்களை பெயிண்ட் செய்ய, 70 ஆயிரம் லிட்டர் பெயிண்ட்டை பயன்படுத்துகிறது. ஹரியானாவின் மனேசர் மற்றும் குர்கானில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை பெயிண்ட் செய்வதற்காக மட்டும் பிரத்யேகமாக 65 ரோபோட்கள் நிறுவப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

20 ஆயிரம் டன் ஸ்டீல்

ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் டன் ஸ்டீலை மாருதி சுஸுகி நிறுவனம் பயன்படுத்துகிறது. இதில், பாதி ஸ்டீல் தென் கொரியாவின் போஸ்கோ மற்றும் ஜப்பானின் கவாஸாகி ஸ்டீல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 2,40,000 டன் ஸ்டீலை மாருதி சுஸுகி பயன்படுத்துகிறது. இது 32 ஈபிள் டவர்களை கட்டமைக்க போதுமானது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

ஒரு காருக்கு 2,545 படிநிலைகள்

ஒரு காரை உருவாக்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவன பணியாளர்கள் 2,545 படிநிலைகளை நிறைவு செய்ய வேண்டும். அதாவது 2,545 ஸ்டெப்கள் மூலம் ஒரு மாருதி சுஸுகி கார் உருவாக்கப்படுகிறது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு காரை உருவாக்குவதற்கான படிநிலைகளின் எண்ணிக்கையானது 3,077 ஆக இருந்தது.

MOST READ: "இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை" நகரவாசிகளுக்கு மட்டும் விலக்களித்த மாநிலம்... எது தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

ஒவ்வொரு நாளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆலைகளுக்கு ஒவ்வொரு நாளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் வந்து செல்கின்றன. இதில், 3,400 டிரக்குகள் கார்களை உற்பத்தி செய்ய தேவையான மூல பொருட்களை கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. 600க்கும் மேற்பட்ட டிரக்குகள், உற்பத்தி செய்யப்பட்ட புதிய கார்களை டீலர்களுக்கு அனுப்பி வைக்க பயன்படுத்தப்படுகின்றன.

MOST READ: பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

ரோபோட்கள் மற்றும் ஆட்டோமேஷன்

கார்களை உற்பத்தி செய்யும் பணிகளில், ரோபோட்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் பயன்படுத்துகிறது. ஆட்டோமேஷன் செயல்முறைகளும் உண்டு. மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 உற்பத்தி ஆலைகளில், 2,400 ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் பெயிண்ட் ஷாப், வெல்டிங் ஷாப்களில்தான் ரோபோட்கள் அதிகம் பயன்படுகின்றன.

MOST READ: இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

பெயிண்ட்டிங் வேலைகளை செய்ய அதிகபட்ச கவனம் தேவை. எனவேதான் ரோபோட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ரோபோட்கள் வேலையை பிழையின்றி செய்து விடும். அல்லது தவறு நடப்பதற்கான வாய்ப்பை வெகுவாக குறைத்து விடும். இதன் காரணமாக கார்களின் உற்பத்தி வேகமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Interesting Facts About Maruti Suzuki. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X