60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக 60 டன் இழவை திறன் கொண்ட மின்சார டிரக் மாடலை ஐபிஎல்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய டிரக் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்த வரும் இந்த டிரக் மாடலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

குர்கான் நகரை சேர்ந்த இன்ஃப்ராபிரைம் லாஜிஸ்டிக்ஸ் டெக்னாலஜீஸ் (ஐபிஎல்டி) நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. முதல் மாடலாக 60 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட மின்சார டிரக்கை உருவாக்கி இருக்கிறது.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

ஐபிஎல்டி ரைனோ 5536 என்ற பெயரிலான இந்த டிரக் இந்திய மின்சார வாகன மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர வகை டிரக் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கும் இந்த டிரக் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

இந்த மின்சார டிரக்கில் 276 kW பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த டிரக்கில் இருக்கும் மின் மோட்டார் 485 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

இந்த டிரக் மணிக்கு 90 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. அத்துடன், இந்த டிரக்கிற்கு 160 kW திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜரை உருவாக்கும் முயற்சியில் ஐபிஎல்டி பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வெறும் 90 நிமிடங்களில் 100 சதவீதம் அளவு பேட்டரியை சார்ஜ் ஏற்றும் திறனுடன் இந்த சார்ஜர் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதனை குறிப்பிட்ட இடங்களில் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல்டி அதிகாரி தெரிவித்துள்ளார்.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்தை மனதில் வைத்து இந்த டிரக்கை வடிவமைத்துள்ளதாக ஐபிஎல்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த டிரக் தீவிரமான சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருக்கிறது.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த புதிய ஐபிஎல்டி ரைனோ 5536 எலெக்ட்ரிக் டிரக்கின் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 டிரக்குகளையும், 2021ம் ஆண்டுக்குள் 10,000 டிரக்குகளையும் விற்பனை செய்துவிட இலக்கு நிர்ணயித்துள்ளது.

60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்!

அதாவது, புதிதாக 68 நெடுஞ்சாலை திட்டங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இந்த திட்டங்களுக்காக தேவைப்படும் டிரக் சந்தையை குறிவைத்து ரைனோ எலெக்டிரிக் டிரக்கை களமிறக்க ஐபிஎல்டி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2019, 12:00 [IST]
English summary
Gurgaon based Infraprime Logistics Technologies company (IPLT) has revealed its first all-electric truck called the Rhino 5536.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+