இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இசூஸு கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

கார் விற்பனை சுணக்கமான நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்கு கார் நிறுவனங்கள் போட்டா போட்டியில் இறங்கி உள்ளன. முன்னணி கார் நிறுவனங்கள் அதிகபட்ச சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

இந்த வரிசையில், பிரிமீயம் யுட்டிலிட்டி கார்களை விற்பனையில் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள இசுஸு நிறுவனமும் டிஸ்கவுண்ட் ஆஃபர்களை அறிவித்துள்ளது. எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, வி- க்ராஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் மற்றும் டி-மேக்ஸ் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

இசுஸு நிறுவனத்தின் அதிகம் விரும்பப்படும் டி-மேக்ஸ் வி க்ராஸ் பிரிமீயம் ரக பிக்கப் டிரக்கிற்கும் டிஸ்கவுண்ட் ஆஃபர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, டீலர் அளவிலும் கூடுதல் சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இசுஸு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

இந்த டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் டீலர்களில் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைவராலும் விரும்பப்படும் இசுஸு டி-மேக்ஸ் இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட் ரூ19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மாடலுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. எனவே, பண்டிகை காலத்தில் முன்பதிவு செய்வோர் கூடுதல் சலுகைகளை பெறலாம்.இந்த மாடலில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

இதர டி மேக்ஸ் வி க்ராஸ் வேரியண்ட்டுகளில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஷிஃப்ட் ஆன் ஃப்ளை 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. ஆஃப்ரோடு பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

இசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்!

அடுத்த மாதம் 31ந் தேதி வரை இந்த டிஸ்கவுண்ட் ஆஃப் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இசுஸு கார்கள் மீதான டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரங்களை அருகிலுள்ள இசுஸு டீலரை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2019, 15:19 [IST]
English summary
Isuzu is offering massive discounts across its portfolio. The offer at hand is valid on the V-Cross base and MU-X variants, and all commercial D-Max and S-Cab variants. The offer is valid till October 31st, 2019.
மேலும்... #இசுஸு #isuzu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+