இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கும் புதிய இசுஸு கார் உள்ளிட்ட வாகனங்களின் விலை எகிடுதகிடாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

இசுஸு நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் வாகனங்கள் இந்தியாவில் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான வாகனங்களின் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வர இசுஸு முடிவு செய்துள்ளது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கார் மற்றும் பிக்கப் டிரக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வாகனங்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும்.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் இசுஸு மாடல்களின் விலை ரூ.4 லட்சம் வரை அதிகரிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி மற்றும் இசுஸு டி-மேக்ஸ் வி க்ராஸ் ஆகிய பிரிமீயம் வகை தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விலை குறைந்தது ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

அதேபோன்று, இசுஸு டிமேக்ஸ் மற்றும் டி-மேக்ஸ் எஸ் கேப் ஆகிய இரண்டு வாகனங்களின் விலையும் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இசுஸு இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் ஷங்கர் சீனிவாஸ்,"புதிய வாகனங்கள் வாங்குவது குறித்து வாடிக்கையாளர் மனதில் குழப்பமான நிலை உள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு அமலுக்கு வந்தாலும், வரும் மார்ச் மாதத்திற்குள் வாங்கப்படும் பிஎஸ்-4 வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். மேலும், பிஎஸ்-4 வாகனங்களுக்கான சேமிப்பு மற்றும் இதர விஷயங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக தொழில்நுட்ப மாற்றங்களும், முதலீடுகளும் தேவைப்படுகின்றன. குறிப்பாக, டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் கட்டாயமாக உள்ளது.

இசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது!

எனவே, பெட்ரோல் வாகனங்களைவிட டீசல் வாகனங்களின் விலையை மிக கணிசமாக அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால், பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிறிய டீசல் எஞ்சின்களை மேம்படுத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu India has revealed that the company will stop production of its BS4 compliant vehicles by the end of December 2019. The company is planning to launch BS-6 complaint models by early next year.
Story first published: Saturday, November 23, 2019, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X