'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வழங்கப்பட்டுள்ள அர்த்தத்தை மாற்ற வலியுறுத்தி சமூக வலை தளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் டிக்ஸ்னரி (OED - Oxford English Dictionary) மற்றும் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரிஸ் (Oxford Dictionaries) ஆகியவற்றிடம் ஜாகுவார் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதில், 'கார்' என்ற வார்த்தைக்கான வரையறையை திருத்தியமைக்க வேண்டும் என ஜாகுவார் கேட்டு கொண்டுள்ளது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

தற்போதைய நிலையில் ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் டிக்ஸ்னரியில் கார் என்ற வார்த்தைக்கு என்ன வரையறை கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? ''டிரைவர் மற்றும் சிறிய அளவிலான பயணிகளை ஏற்றி செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட மோட்டார் மூலம் (வழக்கமாக ஐசி இன்ஜின் - Internal Combustion Engine) இயங்கும் ஒரு சாலை வாகனம். பொதுவாக முன் பகுதி மற்றும் பின் பகுதியில் 2 சக்கரங்கள் இருக்கும்.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

குறிப்பாக பிரைவேட் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக பயன்டுத்தப்படுகிறது'' என்பதுதான் கார் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் டிக்ஸ்னரியில் கொடுக்கப்பட்டுள்ள வரையறை. அதே சமயம் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரிஸிலும் கூட கிட்டத்தட்ட இதே வரையறைதான் கார் என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

''பொதுவாக நான்கு சக்கரங்களுடன் இருக்க கூடிய ஒரு சாலை வாகனம். இதில், ஐசி இன்ஜன் வழங்கப்பட்டிருக்கும். சிறிய அளவிலான பயணிகளை ஏற்றி செல்ல இயலும்'' என்பதுதான் கார் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரிஸ் வழங்கியுள்ள வரையறை. தற்போது இதனை திருத்தியமைக்க வேண்டும் என ஜாகுவார் விரும்புகிறது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

அதாவது எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்பட கூடுதல் பவர்டிரெய்ன்களையும் சேர்த்து வரையறையை ஆக்ஸ்போர்டு மேம்படுத்த வேண்டும் என்பதுதான் ஜாகுவாரின் கோரிக்கை. ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-Pace) கார்தான் அந்நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் காரணம். ஜாகுவார் ஐ-பேஸ் ஆல்-எலெக்ட்ரிக் பெர்ஃபார்மென்ஸ் எஸ்யூவி கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

இதனிடையே இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மக்களிடமும் ஜாகுவார் கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பான தங்களின் எண்ணங்களை சமூக வலை தளங்களின் வாயிலாக மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என ஜாகுவார் விரும்புகிறது. இதற்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் #RedefineTheCar என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தும்படி மக்களை ஜாகுவார் வலியுறுத்தியுள்ளது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

எனவே நெட்டிசன்களும் தற்போது இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எனினும் தற்போதுதான் இது தொடர்பான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் முன்பை காட்டிலும் உலகம் முழுவதும் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. எதிர்கால உலகை எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆளும் என ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

'கார்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா? உடனே மாத்துங்க பாஸ்

அதே சமயம் வழக்கமான ஐசி இன்ஜனிலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் உலகின் பல்வேறு நாடுகளும் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Wants The Definition Of ‘Car’ Changed To Include Electric Cars. Read in Tamil
Story first published: Saturday, August 17, 2019, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X