ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) இந்தியா நிறுவனம் தனது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு கவர்ச்சிகரமான சேமிப்புச் சலுகைகளை இந்த விழாகாலத்திற்கு அறிவித்துள்ளது. குறைந்த இஎம்ஐ, எக்ஸ்சேன்ஞ் போனஸ் போன்ற தள்ளுபடிகளை இந்த சலுகையில் ஜாகுவார் நிறுவனம் சேர்த்துள்ளது.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

இந்த சலுகைகள் எக்ஸ்இ, எக்ஸ்எஃப், எக்ஸ்ஜே மற்றும் எஃப்-பேஸ் போன்ற ஜாகுவார் லைன்-அப் மாடல் கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் செடான் மாடல் ஜீரோ சதவீத வட்டி உள்பட ரூ.8.5 லட்சம் வரையில் சலுகைகளை இந்த விழாகாலத்தில் பெறுகிறது.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

இந்த ஜீரோ சதவீத வட்டி ஜாகுவார் நிறுவனம் கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தான் வழங்கப்படவுள்ளது. மேலும் சலுகைகளை பெற வாடிக்கையாளர்கள் வாங்கும் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் காரின் வேரியண்ட்கள் 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

அடுத்ததாக இந்த சலுகைகளை பெறும் கார்களின் லிஸ்ட்டில் உள்ள எக்ஸ்எஃப் லக்சரி செடான் மற்றும் எஃப்-பேஸ் எஸ்யூவி கார்களுக்கு ஜீரோ சதவீத வட்டியுடன் ரூ.9 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதிலும் ஜீரோ சதவீத வட்டி, வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்து மாறுப்படும்.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனையாகும் எஃப்-பேஸ் எஸ்யூவி மற்றும் இரு என்ஜின் தேர்வுகளுடன் ஐந்து வேரியண்ட்களில் (ப்யூர் எண்ட்ரி-லெவலை தவிர்த்து) வெளியாகும் எக்ஸ்எஃப் மாடலின் அனைத்து வேரியண்ட்களும் ஜாகுவாரின் நிபந்தனையின்படி 2018ஆம் ஆண்டில் அறிமுகமானதால், இந்த சலுகைகளை பெறுகின்றன.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

ஜாகுவாரின் முதன்மை செடான் மாடலான எக்ஸ்ஜே பல விதமான தள்ளுபடிகளாக சேர்த்து மொத்தம் ரூ.31.40 லட்சம் வரையில் சலுகைகளை இந்த தீபாவளி விழாக் காலத்தில் பெறுகிறது. இந்த மாடலுக்கும், ஜாகுவாரின் 2018 ஆம் ஆண்டு அறிமுகமாகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உட்படுகிறது. இதனால் இந்த காரின் 3.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் கூடிய ட்ரீம் லெவல் வேரியண்ட்டிற்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

இதுதவிர ஜாகுவாரின் எஃப்-டைப் ஸ்போர்ட்ஸ் மாடலுக்குரிய சலுகை விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் இந்த தீபாவளிக்கு இந்த எஃப்-டைப் ஸ்போர்ட்ஸ் காருக்கு டீலர்கள் தான் சில சலுகைகள் வழங்குவார்கள் என தெரிகிறது.

Most Read:ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

மீண்டும் சலுகைகளை பெறும் கார்களை பார்த்தோமேயானால், லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனையில் வைத்திருக்கும் எவோக்யூ மற்றும் இதன் வேரியண்ட்டான எவோக்யூ கான்வெர்டிபிள் மாடல் கார்கள் முறையே ரூ.9 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் வரை சலுகைகளை பெறுகின்றன. ஜீரோ சதவீத வட்டி சலுகையை பெறும் இந்த கார்களுக்கான சேமிப்புச் சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

டிஸ்கவரி மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களுக்கு முறையே ரூ.16 லட்சம் மற்றும் ரூ.11 லட்சம் வரை சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டிஸ்கவரி ஸ்போர்ட் மட்டும் ஜீரோ சதவீத வட்டி தேர்வை பெறுகிறது. அதேபோல் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளும் இந்த இரு மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் தான்.

Most Read:ஒத்தி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் இந்திய அறிமுகம்... காரணம் என்ன?

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் வேலர் மாடல்கள் முறையே ரூ.40 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை சலுகைகளை பெறுகின்றன. இவற்றின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீரோ சதவீத வட்டி தேர்வும் நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி, தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்பட இருக்கிறது.

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

லேண்ட் ரோவரின் இந்திய டாப் லைன்-அப் மாடலான ரேஞ்ச் ரோவர் அதிகப்பட்சமாக ரூ.60 லட்சம் வரை சலுகைகளை இந்த விழாகாலத்தில் பெறுகிறது. மேற்கூறப்பட்ட அனைத்து சலுகைகளும், டீலர்களிடம் பழைய கார்களை விற்கும்போது கிடைக்கும் எக்ஸ்சேன்ஞ் போனஸும் டீலர்களை பொறுத்து வேறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read:முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்கம் போட்றாதீங்க...

ரூ.60 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ள ஜாகுவார் நிறுவனம்...

இவ்வாறு உயர்தர வகை கார்களை தயாரிக்கும் நிறுவனமும் தீபாவளி சலுகைகளை அறிவித்திருப்பது கண்டிப்பாக அவற்றின் விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பழைய தயாரிப்புகள் அனைத்தையும் விரைவில் விற்று பிஎஸ்6 தரத்தில் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஜாகுவார் நிறுவனத்தின் எண்ணமும் இந்த சலுகை அறிவிப்புக்கு முக்கிய காரணம்.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover Discount Offers: Festive Benefits Available Across Models
Story first published: Saturday, October 26, 2019, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X