உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்...

ஓட்டுநரின் உணர்வையறிந்து, தானாக செயல்படுகின்ற வகையிலான செயற்கை நுண்ணறிவு கொண்ட காரை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இனி உங்கள் கார், உங்கள் மன நிலையைப் பொருத்து செயல்படும். நீங்கள் சோகமாக இருந்தால் அது உங்களை உற்சாகப்படுத்தும் வகையில் செயல்படும். இதற்கான, ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட சிஸ்டத்தை உருவாக்கும் பணியில் பிரபல ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இது, காருக்குள் பயணிப்பவரின் முக பாவனையை ஸ்கேன் செய்து செயல்படும் தொழில்நுட்பம் ஆகும். ஆனால், இது பிரத்யேகமாக ஓட்டுநர் இருக்கையில் அமருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

அதேசமயம், இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழில்நுட்பமானது, கேபின் அமைப்பையும், ஓட்டுநரின் இருக்கையையும் கட்டுபடுத்தும் வகையிலும் தன்மையையும் பெற்றிருக்கின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இந்த புதிய தொழில்நுட்பம் ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட கேமிரா மற்றும் பயோமெட்ரிக் மெஷின்மூலம் இயங்கும். இது ஓட்டுநரை நேரடியாக கண்கானித்து, மதிப்பீடு செய்யும். அவ்வாறு, இந்த தொழில்நுட்பம் ஓட்டநரின் உணர்வை தானாக உணர்ந்து, அவருக்கு தேவையென்றால், வெப்பம், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பு, மீடியா மற்றும் சுற்றுப்புற விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களை அது தானாக மாற்றியமைக்கும்.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இந்த அமைப்புகள் அனைத்தும் ஓட்டுநரின் முகப் பாவனையை வைத்தே மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த புதிய திட்டமானது, வாகன ஓட்டியின் மன உலைச்சலைக் குறைக்கவும், அவர்களை குஷிப்படுத்தும் நோக்கிலேயே தயார் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்த முயற்சிக்கு, 78 சதவிகித வாகன ஓட்டிகள், பணியின் காரணமாகவும், மன உலைச்சலின் காரணமாகவும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதே காரணமாக இருக்கின்றது. மேலும், அவர்கள் அவ்வாறு, மன உலைச்சலுடன் வாகனத்தை இயக்கும்போது, பெரும் பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். இதன்காரணமாக, இவற்றைக் குறைக்கும் விதமாக இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

மனநிலை கண்டறியும் சிஸ்டமானது, தொடர்ச்சியாக ஓட்டுநரின் முகபாவனைகளை பதிவு செய்யும். அவ்வாறு, அவரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு, அது தானாக இயங்கி பல அம்சங்களைக் கட்டுபடுத்துகின்றது. மேலும், ஓட்டுநருக்கு தேவையான அமைப்புகளையும் அது தானாக கண்டறிந்து கொள்கின்றது. அவ்வாறு, கண்டறிந்த அமைப்புகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அடுத்தமுறை அவர் காரை இயக்கும்போது, அதே அமைப்பை அந்த சிஸ்டம் தானாக ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அதேசமயம், செயற்கை நுண்ணறிவுக் கொண்ட இந்த சிஸ்டம், ஓட்டுநர் மன உலைச்சலில் இருப்பதைக் கண்டறிந்தால், அவரைச் சாந்தம் செய்யும்வகையில், வண்ணம் நிறைந்த விலக்குகளால் காரை அலங்கரிக்கின்றது. அதாவது, அவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் வகையிலான வண்ண மின் விளக்குகளை ஒளிரச் செய்து, அவரை சாந்தம் செய்யும். மேலும், அவருக்கு பிடித்தமான பாடல் அல்லது இசையையும் அது ஒலிக்க செய்கின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இத்துடன், சோர்வு மற்றும் உணர்வைக் கொண்டு, கேபினின் வெப்பநிலையையும் அது குறைக்கும். தற்போது, ஓட்டுநர்களுக்காக தயார் செய்யப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பத்தை, காரில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்காகவும், ஜாகுவார் நிறுவனம் தயார் செய்ய இருக்கின்றது. இதற்கான முயற்சிகளையும், ஆய்வுகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இதற்காக, முன் இருக்கையின் ஹெட் ரெஸ்ட் பகுதியில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமிரா பொருத்தப்பட உள்ளது. இது, காரில் அமர்ந்து செல்லபவர்களின் உணர்வுகளை உட்கொணர்ந்து செயல்படும். அவ்வாறு, பயணி சோர்வாக இருப்பதை அது உணர்ந்தால், மின் விளக்குகளை மங்கச் செய்து அவருக்கு உறங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும், அதற்கேற்பவாறு வெப்பநிலையையும் அது மாற்றியமைக்கும். இந்த சொகுசு வசதிகள், பயணிகளுக்கு வீட்டில் இருப்பதைப்போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

உங்கள் சோகமான நாளைகூட சந்தோஷமானதாக மாற்றிவிடும் இந்தகார்... அசத்தும் புதிய தொழில்நுட்பம்... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே, இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட மனநிலையைக் கண்டறியும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பலதரப்பட்ட வசதிகளை அதன் வாகனங்களில் நிறுவும் வகையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, அந்நிறுவனம் பலதரப்பட்ட ஆய்வுகளையும் தொடர்ச்சியாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் பயணி மற்றும் வாகன ஓட்டி என இரு தரப்பினரையும் மையமாகக் கொண்டே அவை தயாராகி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover Tech Helps Reduce Stress — You Car Adapts To Your Mood. Read In Tamil.
Story first published: Saturday, July 13, 2019, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X