ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் விரைவில் வரும் புதிய கியா செல்டோஸ் போன்ற புதிய எஸ்யூவி மாடல்களால் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சந்தைப் போட்டியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் வகையில், காம்பஸ் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுக்க இருக்கிறது ஜீப் நிறுவனம்.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவி புதுப்பொலிவு கொடுக்கப்பட இருக்கிறது. முகப்பு க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் புதிய அலாய் வீல்களுடன் ஜீப் காம்பஸ் வர இருப்பதாக தெரிகிறது. அதேபோன்று, உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

வென்டிலேட்டட் இருக்கைகள், சிம் கார்டுடன் நேரடி இணைய வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரிமீயம் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

முக்கிய மாற்றமாக புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் தற்போதைய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.3 லிட்டர் ஃபயர்ஃப்ளை பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

கடந்த ஆண்டு ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் இந்த புதிய 1.3 லிட்டர் ஃபயர்ஃப்ளை பெட்ரோல் எஞ்சின் அறிமுகமானது. இந்த எஞ்சின், 150 பிஎஸ் பவர் மற்றும் 180 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இரண்டுவிதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு தக்க வைக்கப்படும். அண்மையில் விற்பனைக்கு வந்த ஆஃப்ரோடு மாடலில் கொடுக்கப்படும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு, டீசல் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இடம்பெற இருக்கிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

மேலும், தற்போது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், 2 வீல் டிரைவ் சிஸ்டம் தேர்விலும் புதிய ஜீப் காம்பஸ் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், போட்டியாளர்களுக்கு கடும் சவால் தரும் மாடலாக மீண்டும் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

இதனிடையே, ஜீப் காம்பஸ் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் மாடலும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்படும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2019, 11:21 [IST]
English summary
According to reports, Jeep Compass will get facelift model In India by 2020.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+