ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் லான்ஜிடியூட் ஆப்ஷனல் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்தது தெரிந்ததே. இந்த நிலையில், டாடா ஹாரியர் வருகை ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்டை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் லான்ஜிடியூட் ஆப்ஷனல் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.18.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹாலஜன் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 17 அங்குல அலாய் வீல்கள் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

முன்னதாக இந்த லான்ஜிடியூட் ஆப்ஷன் வேரியண்ட்டானது டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.. 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதுவரை லிமிடேட், லிமிட்டேட் ஆப்ஷனல் மற்றும் லிமிடேட் ப்ளஸ் உள்ளிட்ட உயர் வகை வேரியண்ட்டுகளில் மட்டுமே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடுத்தர வகை லான்ஜிடியூட் ஆப்ஷனல் வேரியண்ட்டிலும் இப்போது வந்திருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

விலை உயர்ந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களைவிட ரூ.1 லட்சம் வரை விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.15.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.22.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

விரைவில் வர இருக்கும் டாடா ஹாரியர் நேரடி போட்டியாக இருக்கும். அத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 15, 2019, 13:13 [IST]
English summary
Jeep India has introduced a new variant to its Compass lineup. The Jeep Compass now comes with a new petrol-automatic variant for its Longitude (O) trim. The Jeep Compass Longitude (O) petrol automatic is priced at Rs 18.9 lakh, ex-showroom (Delhi).
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+