புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்லஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் மாடலுக்கு தனிமதிப்பு இருந்து வருகிறது. அம்சமான டிசைன், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவியை இந்தியர்கள் உச்சி முகர்ந்து சீராட்டி வருகின்றனர்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் முழுமையான ஆஃப்ரோடு மாடல் ட்ரெயில்ஹாக் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஏராளமான கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகர விஷயங்களுடன் வர இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், ரூ.50,000 முன்பணத்துடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பும் உள்ளது. நாடுமுழுவதும் உள்ள 82 ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் டீலர்களில் இன்று முதல் முன்பதிவு ஏற்கப்பட இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் முதல்முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வருவதும் கவனிக்கத்தக்க விஷயம். மேலும், இது பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர டீசலில் இயங்கும் என்பது மற்றொரு சிறந்த விஷயம்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், லோ மற்றும் ராக் டிரைவிங் மோடு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த எஸ்யூவியில் ஆட்டோ, ஸ்னோ, மட் மற்றும் சேண்ட் ஆகிய 4 விதமான நிலப்பரப்புகளில் ஓட்டுவதற்கான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு தக்கவாறு, கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த புதிய எஸ்யூவியில் 8.4 அங்குல யு-கனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பில்ட் இன் நேவிகேஷன், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஜீப் ஆக்டிவ் 4 வீல் டிரைவ் லோ ஆகிய சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. 7 அங்குல திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. எஞ்சின் வெப்ப நிலை, ஆயில் அளவு, மைலேஜ் உள்ளிட்ட பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

சீட் கவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட இடங்களில் விசேஷ தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் உள்ளிட்ட 50 விதமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொடுக்ப்பட்டுள்ளன. எனவே, இது ஒரு சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2019, 17:16 [IST]
English summary
FCA India has started the bookings for Jeep Compass Trailhawk AWD for an amount of Rs 50,000, which is fully refundable.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+