ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ
குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்களை கொண்ட வேரியண்ட்கள் அதிகப்பட்சமாக ரூ.1.6 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறவுள்ளன.

அதன்படி, எண்ட்ரீ-லெவல் மாடலான காம்பஸ் ஸ்போர்ட்டின் 4x2 டீசல் வேரியண்ட் ரூ.1.6 லட்சம் வரையில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறுகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் ரூ.70,000 வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பெறவுள்ளது. அதேபோல் ஸ்போர்ட்டின் மற்றொரு எடிசனான ஸ்போர்ட் ப்ளஸின் டீசல் வேரியண்ட் ரூ.1.1 வரையிலும், பெட்ரோல் வேரியண்ட் ரூ.50,000 வரையிலும் சலுகைகளை பெறுகின்றன.

ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் லாங்கிட்யூட்டின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் உள்ள 4x2 டீசல் வேரியண்ட்டிற்கும் இதே ஒழுங்கமைப்பில் உள்ள காம்பஸின் மற்ற லிமிட்டேட் ட்ரீம்களுக்கும் ரூ.1.4 லட்சம் வரையில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாங்கிட்யூட்டின் (O) ட்ரீம் ரூ.1.6 லட்சம் வரையிலான கூடுதல் சலுகைகளுடன் இந்த மாதத்தில் விற்பனையாகவுள்ளது.

இதன் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்களுக்கு ரூ.1.1 லட்சம் வரையிலான சலுகைகளும், லிமிடேட் (O) ட்ரீம்களுக்கு கூடுதலாக ரூ.1.40 லட்சம் வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றப்படி காம்பஸின் லிமிட்டேட் ப்ளஸ், காம்பஸ் லிமிடேட் ப்ளஸ் 4x4, காம்பஸ் லிமிடேட் 4x4 மற்றும் காம்பஸ் ட்ரையல்ஹாக் போன்ற வேரியண்ட்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

ஜீப் காம்பஸ் இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆறு-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 171 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலின் ட்ரையல்ஹாக் வேரியண்ட் மட்டும் தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜினை பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த வேரியண்ட்டின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அமைப்பும் மேற்கூறப்பட்டுள்ள அதே ஆற்றலை தான் வெளியிடும் திறனை கொண்டது. ஆனால் இதன் என்ஜினுடன் ஒன்பது வேக நிலைகளை வழங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸின் மற்றொரு என்ஜின் தேர்வான 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 160 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ஆறு-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏழு-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஜீப் காம்பஸ் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.15.60 லட்சத்தில் இருந்து ரூ.27.60 லட்சம் வரை விற்கப்பட்டு வருகின்றன. மேலும் ஜீப் நிறுவனம் காம்பஸின் ஃபேஸ்லிப்ட் மாடலையும் 2020-ன் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணையான என்ஜினுடன் வெளியாக இருக்கும் இந்த மாடலும் காம்பஸின் ட்ரையல்ஹாக் மாடலை போல ஒன்பது வேக நிலைகளை வழங்கக்கூடிய ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் விற்பனையாகவுள்ளது.

இதுமட்டுமன்றி ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடலின் ஏழு இருக்கை வெர்சன் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த மாடல் அடுத்த ஆண்டு இல்லாமல் அதற்கு அடுத்த ஆண்டு 2021ல் தான் வெளியாகும் என தெரிகிறது. இந்த காம்பஸின் ஏழு இருக்கை வெர்சனை பற்றிய மேலும் தகவல்களுக்கு கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

ஜீப் நிறுவனம் இவ்வாறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளதால் ஜீப் ப்ரியர்கள் காம்பஸ் மாடலை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்றே தோன்றுகிறது. மேலும் ஜீப் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை வரும் மாதங்களுக்கும் அறிவிக்கும் திட்டத்தில் தான் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications








