போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சட்டத்தின் பிடியில் அனைவரும் ஒன்றுதான், போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் டிராஃபிக் போலீஸார் தரமான சம்பவத்தை செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்தியாவில் அண்மைக் காலங்களாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

மேலும், விதிமீறல்களால் உருவாகும், விபத்து உள்ளிட்ட பின் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது, போக்குவரத்துத்துறைக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் தீர்வு காண்பதில் அவர்களுக்கு பெரும் சிக்கல் நிலவி வருகின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஆகையால், தங்களின் பணியை சுலபமாக்கிக் கொள்ளும் விதமாக, தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதில், மிக முக்கியமானதாக சிசிடிவி கேமிராக்களின் பயன்பாடு மாறியிருக்கின்றது.

நாட்டில் அரங்கேறும் பல்வேறு குற்றச் சம்சங்களில் தீர்வு காண்பதற்கும் இது முக்கிய பங்களிக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஆகையால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்கானிக்கும் விதமாக நாட்டின் பல முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்க உதவுகின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சரான சிபி சிங், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, சிசிடிவி கேமிரா புகைப்படத்தை வைத்து போலீஸார் அபராதச் செல்லாண் வழங்கியுள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய போக்குவரத்துத்துறை அமைச்சரே, இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அம்மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை நியூஸ் 11 என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

நாடு முழுவதும் போக்குவரத்து விதமீறலுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் இவ்வாறு செய்திருப்பது, அக்கட்சியில் அவருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், அம்மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமைச்சரின் டொயோட்டா பார்ச்சூனர் கார், சிவப்பு மின் விளக்கு சிக்னலை மீறிச் சென்றுள்ளது. இதையறிந்த, அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட அமைச்சரின் காருக்கு அபராதச் செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஆகையால், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிபி சிங் ரூ. 100 அபராதத்திற்கான இ-செல்லாணைப் பெற்றுள்ளார்.

இந்த தொகையை அவரது உதவியாளரிடம் கட்டிவிடுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், அதிகாரிகளும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இதேபோன்று, முன்பு ஒரு முறை அபராதம் செலுத்தியிருப்பதாக அவர் நினைவு கூர்ந்தார். மேலும், சமீபத்தில் போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி ஒருவர், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை விரட்டிச் செல்வதைக் கண்ட அவர், காவலர்களுக்கு பயனளிக்கும் விதமாக தானியங்கி நம்பர் பிளேட் ரீடரை அறிமுகம் செய்திருந்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

காவலர் செய்த செயல், விபத்துகளை உருவாக்கும் என்பதால், அதனைத் தவிர்க்கும் விதமாக இத்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். ஆனால், அவர் அறிமுகம் செய்திருந்த திட்டமே அவருக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சட்டத்தின் பிடியில் அனைவரும் ஒன்று தான். அதில், அமைச்சராக இருந்தால் என்ன... குடிமகனாக இருந்தால் என்ன... யாராக இருந்தாலும், குற்றத்திற்கு உரிய தண்டனையை அடைந்தே ஆக வேண்டும்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், அதே துறையின் அமைச்சருக்கு அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அநேகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அமைச்சர் பயன்படுத்தும் டொயோட்டா பார்ச்சூனர் கார், அரசின் அதிகாரப்பூர்வமான வாகனம் ஆகும். இது அவரது கடமைகளைச் செய்ய உதவியாக இருக்கும் வகையில் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சிபி சிங்கின் கார் விதியை மீறிச் சென்றது குறித்த புகைப்படம் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை நீங்கள் மேலே காணலாம்...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jharkhand Transport Minister Car Busted For Jumping Traffic Signal. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X