இதற்காக இப்படி ஒரு பரிசா? இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து மனைவிக்கு வழங்கிய பிரபல நடிகர்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை, இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து, மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்காக இப்படி ஒரு பரிசா? இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து மனைவிக்கு வழங்கிய பிரபல நடிகர்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். நடிகர் என்ற அடையாளத்தை கடந்து, பாடகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. மற்ற திரைப்பட நடிகர்களை போன்று புனித் ராஜ்குமாரும், விலை உயர்ந்த சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

ஆடி க்யூ7 (Audi Q7), பிஎம்டபிள்யூ எக்ஸ்6 (BMW X6), ஜாகுவார் எக்ஸ்எப் (Jaguar XF) உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்கள் புனித் ராஜ்குமார் வசம் உள்ளன. இந்த சூழலில் புனித் ராஜ்குமார் தற்போது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் ஒன்றை, அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்காக இப்படி ஒரு பரிசா? இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து மனைவிக்கு வழங்கிய பிரபல நடிகர்

இது எஸ்யூவி (SUV- Sports Utility Vehicle) வகையை சேர்ந்த கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் லம்போர்கினி நிறுவனம் வெளியிட்ட முதல் லக்ஸரி எஸ்யூவி வகை கார் இதுவே. உலகம் முழுவதும் லம்போர்கினி உருஸ் கார் விற்பனையில், சக்கை போடு போட்டு வருகிறது.

புனித் ராஜ்குமாரின் மனைவி ஜாகுவார் எக்ஸ்எப் காரைதான் பயன்படுத்தி வந்தார். இது லக்ஸரி செடான் வகையை சேர்ந்த கார் ஆகும். தற்போது லக்ஸரி செடானில் இருந்து, உலகின் மிக வேகமான எஸ்யூவி காருக்கு அவர் ''அப்கிரேட்'' ஆகியுள்ளார்.

இதற்காக இப்படி ஒரு பரிசா? இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து மனைவிக்கு வழங்கிய பிரபல நடிகர்

புனித் ராஜ்குமார் தன் மனைவிக்கு நீல நிற லம்போர்கினி உருஸ் காரை பரிசளித்துள்ளார். புனித் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் லம்போர்கினி ஷோரூமிற்கு ஒன்றாக சென்று காரை டெலிவரி எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.

லம்போர்கினி உருஸ் காரானது, இத்தாலியில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் தற்போது விற்பனையாகும் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்யூவி வகை கார்களில் ஒன்றாக லம்போர்கினி உருஸ் திகழ்கிறது.

லம்போர்கினி நிறுவனம் இதனை எஸ்எஸ்யூவி என கூறுகிறது. அதாவது சூப்பர் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெய்கில் (SSUV- Super Sports Utility Vehicle). இதில், 4.0 லிட்டர், டிவின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. லம்போர்கினி உருஸ் காரின் மற்றொரு ஸ்பெஷல் அதன் இன்ஜின்தான். இதுதான் லம்போர்கினி நிறுவனம் முதல் முறையாக உருவாக்கிய டர்போசார்ஜ்டு (Turbocharged) இன்ஜின்.

லம்போர்கினி நிறுவனத்தின் எஞ்சிய கார்களில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (Naturally Aspirated) இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருக்கும். லம்போர்கினி உருஸ் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும்.

இதற்காக இப்படி ஒரு பரிசா? இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து மனைவிக்கு வழங்கிய பிரபல நடிகர்

பெரிய சைஸ் எஸ்யூவி கார் ஒன்று இவ்வளவு விரைவாக வேகமெடுப்பது சாதாரண விஷயமல்ல. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இது 12.8 வினாடிகளில் எட்டி விடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்கள்.

கடந்த மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டுதான் தனது மனைவிக்கு இப்படி ஒரு பரிசை புனித் ராஜ்குமார் வழங்கியுள்ளார். இந்திய மார்க்கெட்டில் லம்போர்கினி உருஸ் காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் (Huracan) மற்றும் அவென்டெடார் (Aventador) உள்ளிட்ட கார்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்தியாவை சேர்ந்த செல்வ செழிப்பு மிக்க நபர்கள் அவற்றுக்கு பதிலாக இனி உருஸ் காரை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) போன்ற லக்ஸரி எஸ்யூவி வகை கார்களுடன், லம்போர்கினி உருஸ் போட்டியிட்டு வருகிறது.

இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனமும் வெகு விரைவில் புதிய எஸ்யூவி வகை கார் ஒன்றை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Mega Powerstar Puneeth rajkumar Fan Club

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2019, 16:25 [IST]
English summary
Kannada Actor Puneeth Rajkumar's Gift To His Wife-Lamborghini Urus SUV. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+