மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்...
உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு விதித்த அதிரடி உத்தரவினால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போக்குவரத்தும், அதற்கு முக்கிய பங்கினை வகிக்கும் சாலைகளே இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களின் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கின்றன. இவ்வாறு, நாம் கூறுவதற்கான காரணத்தை, பெருநகரங்களில் உள்ள சாலைகளைக் கண்டாலே தெரிந்துவிடும்.

நாட்டில் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்களின் சாலைகள் குண்டும், குழியுமாக, மிக மோசமானநிலையில் காட்சியளிக்கின்றது. இதன்காரணமாக, வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதிலும் மிக முக்கியமாக, முறையாக கட்டமைக்கப்படாத சாலைகளினால், சமீபகாலமாக அதிகப்படியான விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், மோசமான சாலைகளின் காரணமாக, விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதாக நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இத்தகைய ஓர் வழக்குதான் கர்நாடகா மாநிலம், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இறுதிகட்ட தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதில், சாலைகளன் மோசமான நிலை காரணமாக விபத்தைச் சந்திக்கும் மற்றும் காயமடைபவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சியே இழப்பீடு வழங்குவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டைம்ஸ்ஆஃப்இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, "வரி செலுத்தும் குடிமக்கள், சேதமடைந்த சாலைகள் காரணமாக, விபத்தில் சிக்கி காயமடைவதைக் கண்டு வருந்துவதாகவும், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதுகாப்பற்ற சாலைகளை அமைத்துக் கொடுத்த நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.

முக்கியமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமானதாக காட்சியளிக்கின்றன.
நாட்டில் அரங்கேறும் சாலை விபத்துகளுக்கு இதுபோன்ற மோசமான சாலைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற, மோசமான சாலைகளால் அதிகம் பாதிப்படையும் வாகனமாக, இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன.

இருப்பினும், சில சமயங்களில் கார்களும் மிகப்பெரிய பள்ளங்களால் விபத்தில் சிக்கி பேரிழப்பு சந்திக்கின்றன. இதனை உறுதி செய்யும்வகையில், அண்மையில் மும்பை நகரத்தில் ஓர் நிகழ்வு அரங்கேறியது.

சாலையில் இருந்த மிகப் பெரிய பள்ளத்தின் காரணமாக, போக்ஸ்வேகன் காரின் ஏர் பேக்குகள் விபத்தைச் சந்திக்காமலேயே திறந்துள்ளன. அத்துடன், காரின் பின்பக்க பம்பர் மற்றும் பேனல்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகின. இதனால், அந்த காரின் உரிமையாளருக்கு ரூ. 2.50 லட்சம் வீண் செலவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தியச் சாலைகள் சாதரணாகவே மோசமானதாக காட்சியளிக்கின்றன. அதிலும், மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம், அவை இன்னும் மிக மோசமானதாக மாறிவிடுகின்றன. இதனால், மிகப் பெரிய அளவிலான கன ரக வாகனங்கள்கூட பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றன.

இத்துடன், விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கும் அது முக்கிய காரணமாக அமைகின்றன. மேலும், விபத்து மட்டுமின்றி மிக கடுமையான போக்குவரத்து நெரிசலைகூட, இந்த பள்ளம் மேடு நிறைந்த சாலைகளில் நொடிப்பொழுதில் தோற்றுவித்துவிடுகின்றன.

இந்நிலையில், பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இதேபோன்று ஓர் உத்தரவினை பாம்பே உயர்நீதிமன்றம் சில வருடங்களக்கு முன்பு வழங்கியிருந்தது குறிப்படித்தகுந்தது.

நீதிமன்ற தீர்ப்பின்படி, அரசியலமைப்பு 21-வது பிரிவின் கீழ், ஒவ்வொரு குடிமகன்களுக்கும் அர்த்தமுள்ள மற்றும் கௌரவமான வாழ்க்கைக்கையை வாழ உரிமை உண்டு. அதில், தரமான சாலைகளும் அடங்கும். ஆகையால், குழிகள் அல்லாத தரமான சாலைகளை அமைத்து கொடுப்பதில் அரசின் கடமையாகும். இதைத் தவறினால், பொதுமக்கள் சந்திக்கும் இடையூறுகளுக்கு அவர்களே பெறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சாலைகள் குறித்து பெங்களூரு மாநகராட்சிக்கு அறிவுறுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலைகளின் நிலையை கண்காணிக்க வார்டு கமிட்டிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கொண்ட குழு ஒன்று அமைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த குழுக்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள தெருக்களை தவறாமல் ஆய்வு செய்யவதுடன், பராமரிப்பு மற்றும் பழுது குறித்த அறிக்கையை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இத்துடன், குழாய் மற்றும் பரமாரிப்பு பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழிகள்குறித்த தகவலை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் அறிவிப்பு பலகைகள் நிறுவவும் அது அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








