குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

இந்தியாவின் எம்பிவி மார்க்கெட்டை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆண்டு வருகிறது. இதற்கு இணையான அம்சங்கள் கொண்ட நேரடி போட்டி மாடல் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட பிரிமீயமான எம்பிவி கார் மாடலை கியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

கியா கார்னிவல் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் வருகை குறித்த தகவல் இந்தியர்களிடம் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் பிரிமீயம் அம்சங்களுடன் இந்த கார் வர இருப்பதால் நாளுக்கு நாள் இந்த கார் குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

அடுத்த மாதம் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டாவது மாடலாக கியா கார்னிவல் எதிர்பார்க்கப்படுகிறது.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

இந்தநிலையில், கார்னிவல் எம்பிவி காரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

தற்போது வெளிநாடுகளில் இருக்கும் கார்னிவல் எம்பிவி கார் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி கார் 7 சீட்டர், 9 சீட்டர் மற்றும் 11 சீட்டர் என்ற மூன்றுவிதமான இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மட்டுமே அதிக வசதிகள் கொண்ட ஒரே வேரியண்ட்டாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

கியா கார்னிவல் எம்பிவி கார் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா கார்னிவல் காரில் எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் தனித்தனியான கேப்டன் இருக்கைகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறப்பான ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கின்றன.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

இந்த காரில் பல்முனை பாதுகாப்புக்காக அதிக ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வெளிநாடுகளில் 3.2 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. ஆனால், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பில்லை.

குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரைவிட விலை அதிகம் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும் என்ற தகவலும் உள்ளது.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2019, 12:53 [IST]
English summary
Kia Motors recently also confirmed that the Carnival MPV will be their second product in India after the Seltos — here are the top things to know about the Seltos. Now, recent reports from CarWale confirms that the Korean brand will launch the Carnival MPV in the Indian market at the 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+