முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

2020 ஆட்டோ எக்ஸ்போவில் கார்னிவல் எம்பிவி மாடலை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ரூ.25- 30 லட்சத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த எம்பிவி கார் தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

இதற்கு முன்னதாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டபோதும் இந்த எம்பி மாடலின் புகைப்படங்கள் பலமுறை கசிந்துள்ளன. அந்த வகையில் தற்போது மீண்டும் வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது இந்த கார்னிவல் எம்பிவி கார், முழுக்க முழுக்க இந்தியா வாடிக்கையாளர்களுக்காகவே ப்ரேத்யேக தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

2018 ஆட்டோ எக்ஸ்போவிலேயே கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து மாடல்களையும் காட்சிப்படுத்தியபோது இந்த கார்னிவல் எம்பிவியும் காட்சிக்காக வைக்கப்பட்டது. சில வெளிநாட்டு சந்தையில் இந்த எம்பிவி கார், செடோனா என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

கியா நிறுவனத்தால் உலகளவில் அதிக இருக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கார்னிவல் கார் இந்திய சந்தையிலும் ஆறு, ஏழு மற்றும் எட்டு இருக்கை வெர்சன் தேர்வுகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

இந்திய மார்க்கெட்டில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் எம்பிவி மாடலான இன்னோவா க்ரிஸ்ட்டாவை எதிர்த்து களமிறங்கவுள்ளதால் கார்னிவல் காரில், பின்புற இருக்கை பயணிகளுக்கும் 10.1 இன்ச்சில் ஸ்க்ரீன், கால்களை சவுகரியமாக நீண்டி அமர நீண்ட உட்புற கேபின், கியாவின் யூவிஒ இணைப்புடன் உள்ள தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மல்டி-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ட்யூல் சன்ரூஃப், பின்புற கதவுகளுக்கும் பவர் ஸ்லைடிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

இந்த 2020 எம்பிவி மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 202 பிஎச்பி பவரையும் 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு முன்புற சக்கரத்தை இயக்குகிறது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

இதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் தென் கொரியாவில் இருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டன. ஆனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்னிவல் கார்கள், ஆந்திராவில் புதியதாக தொடங்கப்பட்ட கியா தொழிற்சாலையில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டதாகும்.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

கியா நிறுவனம் ஓட்டுனர் இருக்கையை சுற்றிலும் பல தொழிற்நுட்பங்களை வழங்கியுள்ளது. மேலும் ஓட்டுனர் இருக்கையை பல கோணங்களுக்கு அட்ஜெஸ்ட் செய்யும் வசதியையும் கொடுத்துள்ளது. இவை தவிர பாதுகாப்பு மற்றும் ட்ரைவர்-அசிஸ்ட் போன்ற அம்சங்களையும் இந்த 2020 கார்னிவல் காரில் தந்துள்ளது.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

செல்டோஸ் எஸ்யூவி அளவிற்கு விற்பனையாகாவிட்டாலும் கியா மோட்டார்ஸ் லோகோவை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கு உதவினாலே போது என்கிற நிலைப்பாட்டில் தான் இந்நிறுவனம் உள்ளது. இந்த காரின் பரிமாண அளவுகள், நீளம் 5,115 மிமீ, அகலம் 1,985 மிமீ மற்றும் 1,740 மிமீ உயரம் ஆகும்.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியா கார்னிவல் எம்பிவி சோதனை ஓட்டம்..

உலக சந்தையிலும் இந்த பரிமாண அளவுகளில் தான் கார்னிவல் எம்பிவி கார் விற்பனையாகி வருகிறது. இதன் போட்டி மாடல் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் நீளம் 380 மிமீ-ம், அகலம் 155 மிமீ-ம் கார்னிவலை விட குறைவு. இதன் விலை ஏற்கனவே கூறியதுபோல் ரூ.25- 30 லட்சத்திற்குள்ளாக நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles
English summary
Kia Carnival MPV Innova Rival Spotted Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X