கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முதல் மாதத்திலேயே 6,200 கார்கள் விற்பனையாகி அசத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்துடன் அடுத்த மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் கியா மோட்டார் தீவிரமாக இறங்கி உள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அந்த காரை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. அவ்வப்போது இதன் ஸ்பை படங்கள் வெளியாகி வருகின்றன.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

இந்த புதிய கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதால் அதிக ஆவல் எழுந்துள்ளது. மேலும், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட இடவசதியில் சிறப்பான மாடலாக இருக்கும் என்பதே ஆவல் அதிகமாக இருப்பதற்கான காரணம்.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 11 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் 7 மற்றும் 8 சீட்டர் மாடல்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. அதாவது, இன்னோவா க்ரிஸ்ட்டா சந்தையை குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட மிகப்பெரிய கார் மாடலாக இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 4,735 மிமீ நீளமும், 1,830 மிமீ அகலமும், 1,795 மிமீ உயரமும் கொண்டது. வீல் பேஸ் 2,750 மிமீ ஆக இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

ஆனால், கியா கார்னிவல் கார் 5,115 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1,740 மிமீ உயரமும், ,3060 மிமீ வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. நீள, அகலம் மற்றும் வீல் பேஸில் மிக அதிக வித்தியாசம் உள்ளது. இதனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட மிக அதிக இடவசதியை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

இதற்கு தக்கவாறு, இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலையிலும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

புதிய கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இப்போதைக்கு இல்லை.

கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்!

புதிய கியா கார்னிவல் காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் சன்ரூஃப், யுஎஸ்பி சார்ஜர்கள், முன்புற மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் மற்றும் ஏராளமான இதர அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

Spy Images Credit: Powerdrift

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2019, 12:06 [IST]
English summary
Kia Motor is gearing up to launch Carnival MPV in India. Powerdrift has revealed spy photos of the Kia Carnival MPV, while it was on test recently along with Toyota Innova Crysta.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+