கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

செல்டோஸ் மூலமாக இந்தியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக, கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய எம்பிவி கார் வர இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறிய நிலையில், ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

கியா கார்னிவல் கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதற்கு , டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட அதிக இடவசதி, கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருப்பதுதான் முக்கிய காரணம்.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

புதிய கியா கார்னிவல் எம்பவி கார் 5,115 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1,740 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 3,060 மிமீ ஆக உள்ளது. இந்த பிரம்மாண்ட கார் உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

வெளிநாடுகளில் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 11 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மிக சொகுசான எம்பிவி கார் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

புதிய கியா கார்னிவல் எம்பவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதன் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் கால்களுக்கான லெக் ரெஸ்ட் வசதியுடன் கூடிய கேப்டன் இருக்கைகள், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலியுடன் கூடிய இணைப்பு வசதிகள் இடம்பெறும். இந்த காரில் இரண்டு கண்ணாடி கூரை அமைப்பு, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவையும் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த கார் மாடலாக இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!

புதிய கியா கார்னிவல் எம்பிவி காருக்கான முன்பதிவு வரும் ஜனவரி மாதம் மத்தியிலிருந்து துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு இந்த புதிய கியா கார்னிவல் கார் மிக நேரடி போட்டியாக இருக்கும்.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Kia is planning to launch its second product Carnival MPV at Auto Expo 2020.
Story first published: Wednesday, October 16, 2019, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X