புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..

ஆந்திராவில் உற்பத்திச் சாலையை துவங்கியுள்ள கியா நிறுவனம், வருகின்ற 2022ம் ஆண்டு வரை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஓர் புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், இனி ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியாவில் ஓர் புதிய காரை காணும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உருவாகியுள்ளது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக அதன் புதிய மாடல் கார் ஒன்றை கடந்த 20ம் தேதி, புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்தது. இதனை உலகளாவிய வெளியீடாகவே அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அந்தவகையில், புதிய செல்டோஸ் என்ற மாடலைத் தான் கியா நேற்றைய முன்தினம் காட்சிப்படுத்தியிருந்தது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

கியாவின் இந்த செல்டோஸ் கார், பல நாட்களாக டீசர் வீடியோவில் மட்டும், பகுதி பகுதியாக காட்சியளித்து வந்தநிலையில், கடந்த வியாழனன்றுதான் முழுமையான காட்சியை அதன் ரசிகர்களுக்கு வழங்கியது. இந்த காரின் வெளியீட்டின்போது, விற்பனைக்குண்டான அறிமுகம் குறித்த எந்தவொரு தகவலையும் கியா வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கார் வருகின்ற பண்டிகை நாட்களில் ஏதேனும் ஓர் நாளில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது ஆகஸ்டு மாதமாககூட இருக்கலாம் என கூறப்படுகின்றது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

அதேபோன்று, ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், புதிய செல்டோஸ் காருக்கான புக்கிங் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

இந்த கார் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாணட்டில் வைத்து தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டு வருவதால், நியாயமான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், புதிய செல்டோஸ் காருக்கு ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

மேலும், இந்த கார் இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில கண்டங்களுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, மேலும் சில நாடுகளுக்கு இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

இந்நிலையில், கியா நிறுவனம் மேலும் நான்கு மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக வெவ்வெறு விதமான மாடல்களில் அந்த கார்கள் களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

MOST READ: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்.. அதிர்ச்சியில் நிர்வாகம்!

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

முன்னதாக, 2022ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை, ஓர் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்திருந்தது. அந்தவகையில், கூடிய விரைவில் கியா நிறுவனத்தின், அடுத்த தலைமுறை டிசைன் கொண்ட, நான்கு புத்தம் புதிய மாடல் கார்கள் இனி வரிசையாக களமிறக்கப்பட உள்ளன. அதற்கான பணியில்தான் கியா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

இத்துடன், புதிய செல்டோஸ் காரின் பிளாட்பாரத்தில் வைத்து, ஹூண்டாயின் அடுத்த தலைமுறை க்ரெட்டா மாடலும், எம்பிவி ரகத்திலான 7 சீட்டர் மாடலும் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இதில், 7 சீட்டர் எம்பிவி ரக கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.

புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.... இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்....

அதேசமயம், கியா நிறுவனம் முழுக்க முழுக்க அதன் பார்வையை எஸ்யூவி பக்கம் வைத்திருப்பதால், அதன் அடுத்த மாடல்களும் எஸ்யூவி ரகத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில், சப்-4 மீட்டர் ரகத்திலான எஸ்யூவி காரும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2019, 19:34 [IST]
English summary
Kia Planning To Launch Four New Model Cars In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+