ஜனவரியிலேயே விற்பனைக்கு வருகிறது கியா கார்னிவல் எம்பிவி கார்?
வரும் ஜனவரியில் புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் எஸ்யூவிக்கு எதிர்பாராத அளவில் முன்பதிவு குவிந்து வருவதுடன், விற்பனையிலும் அசத்தி வருகிறது. இந்த நிலையில், அடுத்து இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது கியா மோட்டார்ஸ்.

புதிய கியா கார்னிவல் கார் பிரிமீயம் ரக எம்பிவி மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில்தான் புதிய கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அடுத்த மாதமே இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கியா டீலர் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. மேலும், சில டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

புதிய கியா கார்னிவல் கார் பிரிமீயம் அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மார்க்கெட்டை குறிவைத்து வர இருக்கிறது. இந்த காரில் எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல சிறப்புகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த காின் உட்புறமும் பிரிமீயமாக இருக்கும். நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஸ்லைடிங் முறையில் திறக்கும் கதவுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

செல்டோஸ் கார் போன்றே, இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு நேரடி இன்டர்நெட் இணைப்பு வசதி இருக்கும் என்று தெரிகிறுத. யுவோ செயலி மூலமாக ஏராளமான கட்டுப்பாட்டு வசதிகளையும், தகவல்களையும் பெற முடியும்.

புஷ் பட்டனஅ ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 202 பிஎஸ் பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும். வெளிநாடுகளில் 3.3 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காருக்கு ரூ.27 லட்சம் முதல் ரூ.36 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சரியான போட்டியை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
Via - Zigwheels


Click it and Unblock the Notifications








