குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், தனது கால் தடத்தை இந்தியாவில் பதிக்கும் விதமாக, விரைவில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவிற்கான முதல் மாடலாக, எஸ்யூவி ரகத்திலான செல்டோஸ் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த காரை கடந்த 20ம் தேதி அன்றுதான் உலக வெளியீடாக, தலைநகர் டெல்லியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

இதைத்தொடர்ந்து, இந்த கார் இந்தியாவில் விற்பனைக்காக வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யலாம் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் கியா தரப்பில் இருந்து வெளியாகவில்லை. அதேசமயம், நாடு முழுவதும் விற்பனையைத் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் கியா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்ஷிப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

அதேசமயம், டீலர்ஷிப்புகள் நிறுவுவதற்கான பணிகள் முடிவு கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், செயல்பாட்டிற்கு வந்த கியா நிறுவனத்தின் டீலர்கள் சிலர், அதன் முதல் மாடல் செல்டோஸ் காருக்கான புக்கிங்கை துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ரூ. 25 ஆயிரம் என்ற தொகையில் இந்த முன்பதிவு துவங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

ஆனால், இந்த புக்கிங்கானது நாட்டின் அனைத்து நகரங்களிலும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற சில நகரங்களில் மட்டுமே இந்த முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புக்கிங்கிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கியா நிறுவனம் சார்பாக இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும், டீலர்கள் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

கியாவின் இந்த செல்டோஸ் கார், உள்நாட்டு சந்தையில் ஏற்கனவே விற்பனையை படுஜோராக அள்ளிக்குவித்து வரும் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போட இருக்கின்றது. அந்தவகையில், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், ரெனால்ட் கேப்ட்சர், நிஷான் கிக்ஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் புதிய மாடலாக அறிமுகமாக இருக்கின்ற எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்க இருக்கின்றது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

செல்டோஸ் காரின் விற்பனையை ஊக்குவிக்க கியா நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், செல்டோஸ் கார்மீது அதிக எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த காட்சியில், ரக்கூன் ஒன்று, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் காட்சியைப் போன்று, சில தடைகளைத் தாண்டி புதிய செல்டோஸ் காரை களவாட முயற்சிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

இந்திய எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் புதிய செல்டோஸ் காருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கு, செல்டோஸின் எதிர்கால டிசைனும், அதில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக தொழில்நுட்ப அம்சமுமே முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்ற ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

இதற்கான, பிரத்யேக சிம் கார்டைப் பயன்படுத்தி உலகின் எந்தவொரு மூலையிலிருந்து காரை இயக்கலாம். இத்துடன், ஆட்டோ இன்டெலிஜென்ஸ் நுண்ணறிவு கொண்ட வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த காரில் இணைக்கப்பட உள்ளது. இந்த அம்சத்தின்மூலம், காரில் உள்ள சில வசதிகளை, அதன் உரிமையாளர் வாய்ஸ் கமேண்ட் மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும்.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

இதுமட்டுமின்றி, கூடுதலாக பல்வேறு சொகுசு மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் செல்டோஸ் காரில் இடம்பெற இருக்கின்றது. அந்தவகையில், வென்டிலேடிங் திறன் கொண்ட இருக்கைகள், ஹீடட் ஓஆர்விஎம்கள், சன்ரூஃப், பெரியளவிலான நேகிஷன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் மியூஸிக் சிஸ்டம் மற்றும் மியூசிக் ஏற்பவாறு எரியக்கூடிய மின் விளக்குகள் உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் இணைக்கப்பட உள்ளன.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

கியாவின் இந்த செல்டோஸ் மாடல் கார், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜெட் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய மூன்று விதத்திலான எஞ்ஜின் தேர்வில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, இந்த கார் சிங்கிள் மற்றும் ட்யூவல் டோன் வண்ணத்திலும் கிடைக்க இருக்கின்றது.

குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாயப்பு... கியாவின் பிரமாண்ட எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்!

அதில், சிங்கிள் டோன் வண்ணங்களாக சிவப்பு, கருப்பு, நீலம், ஆரஞ்சு, கிளாசியர், வெள்ளை, கிளியர் ஒயிட், க்ரே மற்றும் சில்வர் ஆகிய கலர்களிலும், ட்யூவல் டோன் கலவையாக சிவப்பு நிறத்துடன் கூடிய கருப்பு, கிளாசியர்/ஒயிட், சில்வர்/பிளாக், மற்றும் கிளாசியர் ஒயிட்/ஆரஞ்சு ஆகிய இரு வண்ண தேர்விலும் கிடைக்க இருக்கின்றது. இந்த காருக்கு எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 11 லட்சத்திலிருந்து ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2019, 17:00 [IST]
English summary
Kia Seltos Booking Open In Selected Cities. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+