முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் எஸ்யூவி டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காரை வரும் ஆகஸ்ட் 22ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும் கூட இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை கியா மோட்டார் புதிய நிறுவனம். செல்டோஸ் எஸ்யூவிதான் இந்தியா மார்க்கெட்டில் கியா மோட்டார் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார்.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

பொதுவாக புதிய நிறுவனங்களின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் வரவேற்பு வழங்குவது சந்தேகமே. ஆனால் இந்த எழுதப்படாத விதியை தகர்ந்து எறிந்துள்ளது கியா செல்டோஸ். கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கான முன்பதிவு கடந்த ஜூலை 16ம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு குவிந்துள்ளன.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

புதிய நிறுவனம், புதிய கார் என்பதை தவிர்த்து கியா செல்டோஸ் எஸ்யூவி தற்போது வரை டீலர்ஷிப்களில் காட்சிக்கு கூட வைக்கப்படவில்லை. இதுதவிர இன்னும் விலையும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவை அனைத்தையும் கடந்து முதல் நாளிலேயே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை கியா செல்டோஸ் எஸ்யூவி பெற்றிருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

எனவே கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளன. எனினும் இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை விலை நிர்ணயம் மிகவும் முக்கியமானது. செல்டோஸ் எஸ்யூவி விற்பனையில் சாதிக்க வேண்டுமென்றால், கியா மோட்டார் விலையை சரியாக நிர்ணயிக்க வேண்டும். அத்துடன் விற்பனைக்கு பிந்தைய சேவையும் சிறப்பாக இருப்பது அவசியம்.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என 2 ட்ரிம்களில் கியா செல்டோஸ் எஸ்யூவி வரவுள்ளது. இதில், டெக் லைன் ட்ரிம்மில் E, K, K+, X மற்றும் X+ என மொத்தம் 5 வேரியண்ட்கள் வழங்கப்படவுள்ளன. அதே சமயம் ஜிடி லைன் ட்ரிம்மில், K, X மற்றும் X+ என மொத்தம் 3 வேரியண்ட்கள் வழங்கப்படவுள்ளன. 11 லட்சம் முதல் 17 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் கியா செல்டோஸ் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு கியா செல்டோஸ் விற்பனையில் கடுமையான சவாலை வழங்கவுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள கியா மோட்டார் ஷோரூம்களுக்கு தற்போது கியா செல்டோஸ் எஸ்யூவி வர தொடங்கியுள்ளது.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

இந்தியாவை பொறுத்தவரை கியா செல்டோஸ் எஸ்யூவி காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இவை ஒவ்வொன்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவுகளை வாரி குவித்த கியா செல்டோஸ் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் இன்ஜின்கள் 115 பிஎஸ் பவர் என்ற ஒரே பவர் அவுட்புட்டைதான் கொடுக்கும். அதே சமயம் இந்த இன்ஜின்கள் முறையே 144 என்எம் மற்றும் 250 என்எம் டார்க் அவுட்புட்டை கொடுக்க வல்லவை. அதே நேரத்தில் 1.4 லிட்டர் டர்போ ஜிடிஐ இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 242 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

Most Read Articles
English summary
Kia Seltos Dealership Arrival Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X