டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி ரக கார் குறித்த முதல் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக, அதன் எஸ்யூவி மாடல் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்வது இதுவே முதல் மாடலாகும். எஸ்பி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய மாடலுக்கு செல்டோஸ் என அண்மையில் பெயரிடப்பட்டது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

இந்த புதிய செல்டோஸ் எஸ்யூவி ரக காரைதான் அண்மைக் காலங்களாக கியா நிறுவனம் இந்தியச் சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வந்தது. அவ்வாறு, நீண்ட காலமாக பல பரீட்சையிலும், ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்ட தோற்றத்திலும் தரிசனம் கொடுத்து வந்த கியா செல்டோஸ், தனது முகத்திரையை கிழித்து அறிமுகமாக இருக்கின்றது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

அந்தவகையில், புதிய கியா செல்டாஸ் குறித்த டீசர் வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், காரின் பின்பக்க மின் விளக்கு, வீல், முன் பக்க க்ரில் உள்ளிட்டவற்றின் தோற்றத்தை பகுதியாக காட்சியளிக்கும் வகையில் அந்த அமைந்துள்ளது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

ஏற்கனவே, இந்த மாடலின் தயாரிப்பு நிலை குறித்த ஸ்கெட்ச் வரைபடங்கள் வெளியிடப்பட்டு, எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி வந்தநிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை கீழே காணலாம்.

கடந்த ஆண்டு உலகளவில் நடைபெற்ற வாகன அறிமுகத்தில், இந்தியாவில் தான் அதிகளவிலான வாகன அறிமுகம் நடைபெற்றது. அவ்வாறு, 2018ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் எஸ்பி என்ற கான்செப்ட் மாடலை கியா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

இதன் டிசைனை ஒத்தவாறுதான், புதிய செல்டோஸ் மாடலை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆகையால், எஸ்பி மாடலின் சில டிசைன் தாத்பரியங்களை செல்டோஸ் எஸ்யூவி பெற்றிருக்கின்றது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

புதிய செல்டோஸ், 5 நபர் இருக்கைக் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். அதேசமயம், இந்த எஸ்யூவி எதிர்கால டிசைன் தாத்பரியங்களைக் கொண்டதாக இருக்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையில், தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோ காட்சி இருக்கின்றது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

அதேசமயம், இந்த வீடியோவில் காரின் முழுத் தோற்றம் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், ஸ்பை படத்தில் இதன் முழுத் தோற்றம் காட்சியாகியது குறிப்பிடத்தக்கது. அந்கவகையில், காரின் எல்இடி டெயில் லைட்டிற்கு எதிர்கால தோற்றமாக கிடைமட்ட வடிவம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், புலி முக்கு வடிவிலான தோற்றம் முகப்பு க்ரில்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

தொடர்ந்து, புரஜெக்டர் லென்ஸைக் கொண்ட ஹெட்லேம்ப் முன்பக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், காருக்கு சிறப்பான வண்ண தோற்றம் கொடுக்கும் விதமாக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் பிள்ளர் மற்றும் மேற்கூரைக்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ட்யூவல் டோன் கொண்ட சன்க்கி வீல் உள்ளிட்டவை சிறப்பானதாக இணைக்கப்பட்டுள்ளன.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

இத்துடன் பிரத்யேக வசதிகளாக, ஸ்லாப்பிங் ரூஃப் லைன், மெஷின் கட் அலாய் வீல் மற்றும் ஃப்ளார்ட் வீல் ஆர்க்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதில், காரின் முகப்பு பகுதியைக் காட்டிலும் பின்பகுதி மிகவும் ஷார்ப்பான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. இது மிகவும் தொலைவில் பார்க்கும்போது காருக்கு ரம்மியமான தோற்றத்தை வழங்குகின்றது. மேலும், இதன் ஒட்டுமொத்த தோற்றம் மிகவும் பிரிமியம் லுக்கில் காட்சியளிக்கின்றது.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

இத்துடன் காருக்குள்ளும் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 10.25 இன்சிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஃபாக்ஸ் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

இதன், இன்ஃபோடெயின்மெண் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும், நேவிகேஷன் தகவலையும் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், 7 மல்டி இன்ஃபோ டிஸ்பிளே யூனிட்டுகள், ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்டர்கள், மூட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

பாதுகாப்பு வசதியாக மல்டிபிள் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பேட்டில் ஷிஃப்டர்கள், எலக்ட்ரிக் பார்க் பிரேக், ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

டீசரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த கியா... ஸ்பெஷல் வீடியோ!

கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க இருக்கின்றது. அவ்வாறு, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க இருக்கின்றது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இத்துடன், செல்டோஸ் மாடலில் ஹைபிரிட் வெர்ஷனையும் கியா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Kia Seltos First Teaser Video Released. Read In Tamil.
Story first published: Saturday, June 8, 2019, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X