கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

ஆட்டோமொபைல் துறை சரிவு முகத்தில் இருந்த நிலையிலும், கியா செல்டோஸ் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கடந்த மாதம் 22ந் தேதி கியா மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கம் முதலே கியா செல்டோஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு முதல் 35 நாட்களில் கியா செல்டோஸ் காருக்கு 40,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கியா மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு அதிகாரி மனோகர் பட் தெரிவித்துள்ளார்.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கியா செல்டோஸ் காருக்கு சராசரியாக 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறதாம். முன்பதிவு அதிகரித்து வருவதால், புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு விரைவாக செல்டோஸ் காரை டெலிவிரி கொடுக்க உற்பத்தியை அதிகரிக்கவும் கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் உள்ள கியா மோட்டார் கார் ஆலையானது மாதத்திற்கு 25,000 கார்கள் என்ற அளவில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஆனால், முழுமையான உற்பத்தி திறனுடன் இப்போது செயல்படவில்லை. கடந்த மாதம் இந்த ஆலையில் 6,200 செல்டோஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதனை மாதத்திற்கு 10,000 என்ற அளவில் உயர்த்த கியா முடிவு செய்துள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கியா செல்டோஸ் காரின் இமாலய வெற்றிக்கு ஏராளமான காரணங்கள் அமைந்துவிட்டன. முதலில் ஆளுமையான நவீன காலத்திற்கு ஏற்ற டிசைன். அடுத்து, நேரடி இணைய வசதி உள்பட எக்கச்சக்கமான தொழில்நுட்ப வசதிகள், இறுதியில் ரூ.9.69 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலை ஆகியவை இந்த காருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்துள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கியா செல்டோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் 115 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

இந்த காரின் விலை உயர்ந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அனைத்து எஞ்சின் தேர்வுகளுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்கள் 2020 உலகின் சிறந்த காருக்கான விருது பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கியா செல்டோஸ் கார் ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது. கியா செல்டோஸ் காரின் வரவு போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2019, 10:24 [IST]
English summary
Kia Seltos SUV bookings have recieved 40,000 within 35 days since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+