கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய கியா செல்டோஸ் கார் வரும் 22ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரு மாடல்களில் வர இருக்கிறது.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

இதில், டெக் லைன் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. ஜிடி லைன் என்ற மற்றொரு மாடலானது கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலில் வர இருக்கிறது. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளுக்குமே ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஜிடி லைன் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு இப்போது துவங்கப்பட்டுள்ளதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

ஜிடி லைன் டர்போ பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவுகள் வருவதுடன், ஜிடி லைன் டீசல் குறித்து அதிக விசாரணைகள் இருந்ததால், இந்த அறிவிப்பை கியா வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. டெக் லைன் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

அதேபோன்றே, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. டெக் லைன் மாடலில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

ஜிடி லைன் மாடலில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.0 அங்குல திரையுடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபயர், போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

தவிரவும், முன்புற பம்பர், க்ரில், வீல் கேப்புகள், சைடு ஸ்கர்ட்டுகளில் சிவப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கருடன் வர இருக்கிறு. பிரேக் காலிபர்கள் ஆகியவற்றில் சிவப்பு வண்ணத்தில் இடம்பெற்றிருக்கும். க்ரில் மற்றும் சீட் கவர்களில் ஜிடி லைன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

கியா செல்டோஸ் ஜிடி லைன் டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2019, 18:00 [IST]
English summary
Kia Motors is all set to launch its first product in the Indian market, with the Seltos SUV. The Kia Seltos is available in two main trims: Tech-Line and GT-Line and is scheduled to go on sale in the Indian market on the 22nd of August 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+