கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய டாப் வேரியண்ட் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

கடந்த மாதம் 22ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான விலையில் கியா செல்டோஸ் கார் விற்பனைக்கு வந்தது.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், டெக் லைன் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளிலும், ஜிடி லைன் மாடலானது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

ஜிடி லைன் மாடலின் அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் என்ற வேரியண்ட் பெயரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், தற்போதது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

இந்த புதிய ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் கிடைக்கும். கியா செல்டோஸ் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

அதேபோன்று, டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இ்நத இரண்டு எஞ்சின்களுடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. கியா செல்டோஸ் காரின் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்துள்ளன.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குKள், எல்இடி ஸ்வீப்பிங் லைட் பார், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

உட்புறத்திலும் ஏராளமான விசேஷ அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றுள்ளது. இந்த காரில் 10 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 0.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான அம்சங்களை பெற்றுள்ளது.

கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

கியா செல்டோஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் ஜிடிஎஸ் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.16.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, மேனுவல் கியர்பாக்ஸ் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டை விட சரியாக ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2019, 12:54 [IST]
English summary
Kia Seltos GTX+ petrol and diesel automatic variants launched in India. Both the GTX+ petrol and diesel automatic variants of the Seltos come priced at Rs 16.99 lakh, ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+