புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம் எப்போது?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி கார் அ்றிமுக விபரம் குறித்த தகவலை பார்க்கலாம்.

கியா செல்டோஸ் கார் நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைனிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் அசத்தலாக இருக்கிறது. இதனால், இந்தியா வாடிக்கையாளர் மத்தியில், இந்த புதிய கியா செல்டோஸ் கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், செல்டோஸ் கார் அறிமுகம் குறித்து நேற்று கியா மோட்டார்ஸ் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நேற்று வெளியிடவில்லை. எனினும், அந்நிறுவனவட்டாரத் தகவல்களின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, பண்டிகை காலத்தை மனதில் வைத்து தனது முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை கியா மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறக்க உள்ளது. இதனால், துவக்கத்திலேயே ஓரளவு நல்ல விற்பனை எண்ணிக்கையுடன் இந்திய வர்த்தகத்தை துவங்க முடியும் என்று கருதுகிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கு வரும் ஜூலை மாதம் இரண்டாவது முன்பதிவு துவங்கப்பட இருப்பதாகவும் கியா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையில் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றது.

ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டது போலவே, கியா செல்டோஸ் காரில் யுவோ என்ற மொபைல்போன் செயலி வழங்கப்பட இருக்கிறது. இந்த செயலி மூலமாக ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

புதிய கியா செல்டோஸ் கார் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், விரைவில் வரும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மிட்சைஸ் எஸ்யூவி ரக கார்களுடன் போட்டி போடும். நாடுமுழுவதும் 265 ஷோரூம்களுடன் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது கியா மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








